லாலா அமர்நாத் மரணம்

Subscribe to Oneindia Tamil

கே: விசுவின் அரட்டை அரங்கத்தில் ஆண்களை விட பெண்களே - அதிலும்குறிப்பாக டீன் ஏஜ் பெண்களும், சிறுமிகளுமே மிகத் துடிப்போடு பேசுவதைகவனித்தீர்களா... இப்போது என்ன சொல்கிறீர்கள்...?

ப: அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறவர்கள் ( ஆண், பெண் இரு சாரருமே) பேசுகிற பேச்சு, எனக்கு அதிர்ச்சியளிக்கிறது: என்னைகவலைக்குள்ளாக்குகிறது. அந்தப் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டு, நிகழ்ச்சியை அமைதியாக நடத்திச் செல்கிற விசுவின் பொறுமை, என்னைவியப்புக்குள்ளாக்குகிறது. பொறுமைக் கடல்தான்! அந்த இளைஞர்களில் பெரும்பாலானர்வர்களைப் பொறுத்தவரையில் - எதிர்காலத்தைப் பற்றியஅச்சத்தைத் தோற்றுவிப்பவர்கள் அவர்கள்.

கே: நம் விஞ்ஞானிகள் லஞ்ச ஊழலை கண்டுபிடிக்க, மருந்து ஏதாவது கண்டு பிடித்தால் - எப்படி இருக்கும்?

ப: அந்த மருந்தில் சேர வேண்டிய பொருட்கள், அந்த மருந்துகளின் பாட்டில்கள், அல்லது பாக்கெட்டுகள், போன்றவற்றைவாங்குவதிலும்,வினியோகம் செய்வதிலும் பெரும் ஊழல் நடக்கும்: மருந்தே கலப்படமாகி விடும்: ஊழலுக்கு புதியதோர் களம் பிறந்து தவிர வேறுபலன் இருக்காது.

கே: காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் மறு சிந்தனை செய்யத் துவங்கி இருக்கிறார்கள் என்று மத்திய மந்திரி பெர்னாண்டஸ் கூறியிருப்பது பற்றி...?

ப: பெர்னாண்டஸ் ஆதாரத்துடன் இப்படி பேசியிருக்கிறாரா அல்லது தனக்கு இயற்கையாகவே உள்ள தீவிரவாத பரிவு காரணமாக இப்படிகூறியிருக்கிறாரா - என்பது போகப் போகத்தான் தெரிய வேண்டும்.

கே: நீண்ட ஆயுளுக்கான (ஜெனோம்) முயற்சிகள் வெற்றி பெற்றால், அரசியல்வாதிகள் என்ன நினைப்பார்கள்?

கே:அரசியல்வாதிகள் நினைப்பது இருக்கட்டும்.அவர்களுடைய வாரிசுகள் மனம் ஒடிந்து போய் விடுவார்கள். நமக்கு சான்ஸே வராதுபோலிருக்கிறதே என்று 600 வயது தகப்பனாரைப் பார்த்து வயிறெரிந்து வெதும்புவதைத் தவிர, அவர்களுககு வேறு வழி இருக்காதே!

கே: ஊழல் குற்றச்சாட்டுகளில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் கைதாகி சிறை செல்வது வேதனை அளிக்கிறது என்று சபாநாயகர் பி..டி.ஆர். பழனிவேல்ராஜன் கூறியுள்ளது பற்றி...?

ப: இதற்கே இப்படி வேதனைப்பட்டால், பிறகு என்ன ஆவது? ஒரு நீதிபதி இப்படி சிக்குகிற நாள் வருகிறபோதுே, பழனிவேல் ராஜன் என்னசெய்வாரோ?

கே: சோனியா காந்தி தலைமைப் பதவி ஏற்றதால், காங்கிரஸ் அடைந்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?

ப: உடையாமல் இருந்த்து நன்மை: உருப்படாமல் இருப்பது தீமை.

கே: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு விதிக்கப்பட்ட தண்டனை பற்றி...?

ப: இது அந்நாட்டு சட்டத்தின் தீர்ப்பு அல்லா: அரசு திட்டத்தின் தீர்ப்பு.

கே:அதிகமாக சிந்தனை செய்பவர்களுக்கு, தலையில் முடி இருக்காதாமே உண்மையா?

கே:அதிகமாகப் பேசுபவர்களுக்கு தாடி வளராது என்றால், இதுவும் உண்மையாகத்தான் இருக்கும்.

கே:தி.மு.க., அ.தி.மு.க. - ஆகிய இரு கூட்டணிகளிலும் பா.ம.க.வுக்கு ஒரே நிலைதான். கருணாநிதியும், ஜெயலலிதாவும் என்னிடம் பழகிய விதம்,கொடுத்த மரியாதை இரண்டும் ஒரே மாதிரிதான். வித்தியாசம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறுவது பற்றி...?

ப: கேட்கிற அளவு சீட் கொடுக்கப் போகீறீர்களா?அல்லது அ.தி.மு.க. அணிக்கு போகட்டுமா? என்று கருணாநிதியிடம் நேரிடையாக கேட்கமனமில்லாத காரணத்தால், ராமதாஸ் இப்படி பேசியிருக்கிறார்.பண்பாளர்!

கே: கங்கை,யமுனா, காவிரி - என்று நமது நாட்டில் ஓடும் நதிகளுக்கெல்லாம், பெரும்பாலும் பெண்ணின் பெயரையே வைத்திருப்பது - பெண்மையின்சிறப்பைத்தானே உயர்த்துகிறது?

ப: நதி எந்தப் பாதையில் திரும்பும் , எப்போது பெகுக்கெடுத்து ஓடும். எப்போது வறண்டு விடும் - என்பதெல்லாம் நிச்சயமாகத் தெரியாத விஷயங்கள்:அந்த சிறப்பை பெண்களும் பெற்றிருக்கிறார்கள் - என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுடைய பெண் விரோதப் போக்கு என்னை வியப்பில்ஆழ்த்துகிறது.

கே: தமிழகத்தில் உள்ள ஆறு கோடி தமிழர்களுக்கும், மற்றும் உலகத் தமிழர்களுக்கும் முகவரி கொடுத்தவர் பிரபாகரன்தான் என்கிறாரேராமதாஸ்...?

ப:பெரியார், அண்ணா என்றெல்லாம் பேசி வந்தது வெறும் டூப் என்று ஒப்புக் கொள்வது அவருடைய இஷ்டம் அதில் குறுக்கிட நாம் யார்?

கே: கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரப் படங்கள், அடியோடு நிறுத்தப்பட்டு விட்டதே, இது சரியா?

ப: கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் கிட்டத்தட்ட ஸ்வாமி, பிரேமானந்தா மாதிரி ஆகிவிட்டார்கள். பிரேமானந்தா பெயரைப் போட்டு யாராவதுதனது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வார்களா?

கே: குஜராத் மாநிலம் பரோடாவில் உள்ள ஒரு கல்லூரியில், மாணவர்கள் சிலர் மாணவிகள் இன்ன உடைதான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தி, துணைவேந்தர் அறை முன்பாக நடனம் ஆடிய நிகழ்ச்சி பற்றி...?

ப: அவர்கள் செய்தது அநாகரிகம். ஆனால் அவர்களுடைய அணுகுமுறை கண்டனத்துக்குரியது என்பதால், அவர்களுடைய கோரிக்கையே அர்த்தமற்றதுஎன்று கூறிவிட முடியாது. இதில் எல்லாம் ஓர் ஒழுங்குமுறை கொண்டு வரப்படுவது நல்லதுதான்.

கே:ஆட்சியில் பங்கு கேட்கும் த.மா.கா. எப்படி காமராஜ் ஆட்சி அமைக்க முடியும்? என்று மு.க. ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

ப: காமராஜ் ஆட்சியை உடனடியாக அமைத்தால்தான் உண்டா? ஏதோ ஒரு ஆட்சியில் பங்கு பெற்று - கா ஆட்சி: அதற்குப் பிறகு ம ஆட்சி என்றுபோனால் கடைசியில் காமராஜ் ஆட்சி அமைந்த திருப்தி வந்துவிடுமே!

கே; பெண்களை மதிக்காத நாடும், வீடும் நிச்சயம் உருப்படாது என்று சொல்கிறார்களே! இதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

ப: உண்டு. பெண்களை மதிக்க வேண்டும் என்பதில் முழுமையாக உடன்பாடு உண்டு.

கே:கவர்னர் பதவி - தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி - அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவி - இவை மூன்றில் ஏதேனும் ஒரு பதவியை நீங்கள்பெற்றே தீர வேண்டும் என்ற நிலை வந்தால், எந்தப் பதவியைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

ப:அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவி - சுத்தமாக வேலை இருக்காது: வந்தேனா போனேனா என்று கூட யாரும் கவலைப்பட மாட்டார்கள். நிம்மதி.

கே: கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது பற்றி ...?

ப: உம். சரி. அடுத்த கேள்விக்கு போவோம்.

கே: காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாஹுதின் என்ற தீவிரவாத அமைப்பு, போர் நிறுத்தம் அறிவிப்பு செய்துள்ளது பற்றி...?

ப: பார்ப்போம். இது தாக்குப் பிடிக்கிறதா என்று பார்த்த பிறகுதான் அபிப்ராயம் சொல்ல முடியும்.

கே: கூட்டணியில் இருந்து கொண்டே குழப்பம் ஏற்படுத்தும் வேற்று கட்சி மந்திரிகளை வெளியேற்றாமல், ராம்ஜெத் மலானியை வெளியேற்றியதற்குஎன்ன காரணம்?

ப: ராம்ஜெத் மலானியிடம், எம்.பி.க்கள் இல்லை. நான்கு எம்.பிக்கள் அவர் வசம் இருந்திருந்தால், சமாதானப் பேச்சு நடந்திருக்கும்.

கே: ஜாதி சங்கங்களைத் தடை செய், சட்டத்தில் இடம் உள்ளதா என்பது பற்றி அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் கலைஞர் கூறியிருப்பது பற்றி...?

ப: ஜாதிச் சங்கங்களைத் தடை செய்ய முடியாது. தேர்தலில் ஜாதிப் பிரச்சாரத்தின் மூலம் ஓட்டு சேகரித்தால், அது சட்ட விரோதமானது. இதை வைத்துநடவடிக்கை எடுக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+