For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் கால் சென்டர்கள் தொடங்க தடை: நியூஜெர்சி மாகாண அரசு தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

பல அமெரிக்க நிறுவனங்களும் வெளிநாடுகளில் கால் சென்டர்களைத் துவக்கி வருவதால் உள் நாட்டினருக்கு(அமெரிக்கர்களுக்கு) வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாகக் கூறி அதைத் தடுக்க நியூஜெர்சி மாகாண அரசுகடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன்படி அமெரிக்க அரசின் காண்ட்ராக்ட்களை எடுத்த நிறுவனங்கள் வெளி நாடுகளில் கால் சென்டர்களைத்துவக்க தடை விதித்து சட்டம் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. நியூஜெர்சி மாகாண செனட்டில் இந்த மசோதாநிறைவேற்றப்பட்டுவிட்டது. இது அந்த மாகாணத்தின் அசெம்ப்ளியிலும் நிறைவேறினால் தான் சட்டமாகும்.

இதனால் "கால் சென்ட்டர்கள்" மூலம் வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பல நாட்டினரும்பாதிக்கப்பட உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இந்த பாதிப்பு அதிகம் இருக்கும்.

சமீபகாலமாக "கால் சென்ட்டர்கள்" அசுர வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்தியாவில் ஆங்கில அறிவும், தொழில்திறனும் கொண்ட ஊழியர்கள் குறைந்த ஊதியத்துக்குக் கிடைத்து வருவதால் பல நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு பெங்களூர், டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் கால் சென்டர்களைத் துவக்கிவருகின்றன. இதில் பெரும்பாலானவை அமெரிக்க நிறுவனங்கள் தான்.

இதனால் இந்தியாவில் லட்சக்கணக்கானவர்கள் "கால் சென்ட்டர்களில்" வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அரசின் காண்ட்ராக்ட் பெற்றுள்ள கம்பெனிகள் வெளிநாடுகளில் "கால் சென்ட்டர்களை"துவக்கத் தடை விதிக்கும் வகையில் நியூஜெர்ஸி செனட் புதிய ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்க அரசின் காண்ட்ராக்ட் பெற்ற நிறுவனங்கள் customer care executives போன்ற பதவிகளில்வெளிநாட்டினரை பணியில் அமர்த்தவும் இச் சட்டம் தடை விதிக்கிறது. அந்தப் பணிக்கு அமெரிக்கர் அல்லதுகிரீன்கார்ட் பெற்றவர் யாரும் கிடைக்காவிட்டால் தான் பிறரை நியமிக்க வேண்டும் என்று அச் சட்டம்வலியுறுத்துகிறது.

முன்னதாக அமெரிக்காவில் இயங்கும் கால் சென்டர்களில் ஒட்டுமொத்தமாக வெளிநாட்டுனருக்கே வேலையைத் தர தடைவிதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், பின்னர் அது திருத்தப்பட்டு அமெரிக்கர் அல்லது கிரீன் கார்ட்பெற்றவர்களுக்கு வேலை தரலாம் என்று மாற்றப்பட்டது. அதிலும் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் எனவும்,உரிய அமெரிக்க ஊழியர் கிடைக்காவிட்டால் மட்டுமே வெளிநாட்டிருக்கு வேலை தரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா நிறைவேற முக்கியக் காரணமாக இருந்த பெண் செனட்டர் ஷெர்லி டர்னர் இது குறித்துநிருபர்களிடம் கூறுகையில்,

அரிசோனா மாகாணத்தின் ஸ்காட்டாலே பகுதியில் உள்ள ஈ பண்ட் கார்ப் (eFund Corp) என்ற நிறுவனம் சமீபத்தில்நியூஜெர்சியைச் சேர்ந்த 1.94 லட்சம் மக்களுக்கும் சேவை வழங்கும் ஒரு காண்ட்ராட்டைப் பெற்றது. இதன்படி மாதம் 3,26,000டாலரை அரிசோனா அரசு இந்த நிறுவனத்துக்கு வழங்க உள்ளது.

ஆனால், இந்த சேவைக்காக அமைக்க வேண்டிய தனது கிளை நிறுவனத்தை மும்பையில் தொடங்க ஈ பண்ட் கார்ப்திட்டமிட்டுள்ளது. நியாயப்படி விஸ்கான்சின் மாகாணத்தில் தான் இந்த கிளை நிறுவனத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால்,மும்பையில் குறைந்த ஊதியத்துக்கு ஊழியர்கள் கிடைப்பதால் அதை அந்த நகரில் தொடங்க ஈ பண்ட் கார்ப் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க மக்களின் வரிப் பணத்தில் கிடைத்த காண்ட்ராக்டைக் கொண்டு மும்பையில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புத்தருவதை ஏற்க முடியாது. முறைப்படி அமெரிக்கர்களுக்குத் தான் இந்த வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். வெளிநாடுகளில்குறைந்த ஊதியத்துக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என்பதற்காக அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பில் கை வைக்கக் கூடாதுஎன்றார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X