For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்படியும் ஒரு திருடன்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கையும் களவுமாக பிடிபட்ட திருடனைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.இங்கே ஒரு திருடன் "பேன்ட்டும் சட்டையுமாக பிடிபட்டான். புரியவில்லையா?

திருடிய பேன்டையும், சட்டையையும் போட்டுக் கொண்டு போனால் பறிகொடுத்தவன் சும்மா இருப்பானா என்ன?

இந்த முட்டாள் திருடன் பெயர் சேகர். திருவள்ளூர், திருத்தணி பகுதிகளில் பலரதுவீட்டை பதம் பார்த்தவன்" . எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் அதிகாலைப்பொழுது தான் இவனது வேலை நேரம்".

மற்ற நேரங்களில் திருடிய உடைகளை போட்டுக் கொண்டு, திருடிய பணத்தை"தண்ணீயாய் ஊற்றிக் கொண்டு உல்லாசமாக திரிவான். இவ்வளவுதான் இவனதுஅறிமுகம்.

இவன் பிடிபட்ட கதைக்கு சொந்தக்காரர் செல்வராஜ். திருவள்ளூரை அடுத்தகடம்பத்தூர் பெரியார் தெருவில் வசிக்கும் விவசாயி.பம்ப் செட் மோட்டாரை ரிப்பேர்பார்க்க வேண்டும் என்று 6 ஆயிரம் ரூபாய் பணத்தை சட்டைப் பையில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

இரவானதும் ஜன்னல் ஓரமிருந்த வீட்டுக் கொடியில் சட்டையை கழற்றிப் போட்டுவிட்டு, கட்டிலில் படுத்துத் தூங்கி விட்டார். அந்த நேரத்தில் தொழிலுக்கு" வந்த சேகர்,ஜன்னல் வழியாக பார்த்தான். அழகான வெள்ளை நிறச் சட்டையும், அதன் அருகில்கறுப்பு நிற பேன்ட் ஒன்றும் தொங்கிக் கொண்டிருந்தது. இரண்டையும் எடுத்தான்.உடனடியாக அதை அணிந்து கொண்டான். அவனுக்கென அளவெடுத்துதைத்ததுபோல் கச்சிதமாக இருந்தது.

கட்டி வந்திருந்த பழைய வேட்டியையும், இடுப்பு பெல்டையும் அங்கேயே கழற்றிப்போட்டான். போட்டிருந்த பேன்ட், சட்டையின் பாக்கெட்டுளை துலாவினான்.பேன்டில் ஒரு கைக்குட்டை மட்டும் இருந்தது. ஆனால், சட்டைப் பை அவனைஏமாற்றவில்லை.

60 நூறு ரூபாய் தாள்கள், ரப்பர் பேன்டால் கட்டப்பட்டு பத்திரமாக இருந்தது.

பணத்துக்கு பணம், டிரஸ்சுக்கு டிரஸ். இன்றைக்கு சரியான திருட்டு யோகம் என்றுசிரித்தபடி அங்கிருந்து கிளம்பினான். அதிகாலை 3 மணி இருக்கும். அதாவது திருடன்போன ஒரு மணி நேரத்தில் செல்வராஜ் விழித்துக் கொண்டார்.

அதிகாலையே புறப்பட்டால் தான் வயலுக்கு போய் மோட்டாரை எடுத்துக் கொண்டுதிருவள்ளூருக்கு போக முடியும் என்று நினைத்து எழுந்தவரின் முதல் பார்வையே,அவரது சட்டையை தேடிப் போனது.

ஆனால், அங்கே கயிறு மட்டும் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. கீழே பழையவேட்டியும், பெல்ட்டும் கிடந்தன. திடுக்கிட்டவர் மகன்களை எழுப்பினார்.விசாரித்தார். பின்னர் திருடன் வந்து சென்றதும், பேன்ட்டும், சட்டையும் பறிபோனதும், அவனது இடுப்பு வேட்டிமட்டும் இங்கே இருப்பதும் தெரியவந்தது.

உஷாரான மகன்கள் திருடன் இந்த கிராமத்தை விட்டு இந்த அதிகாலைப் பொழுதில்போக வேண்டுமானால், ரயிலை விட்டால் வழியில்லை. எனவே ரயில்வேஸ்டேஷனுக்கு சென்றால் பிடித்து விடலாம் என்று நினைத்தனர்.

மேலும், திருடன் தனது பேட்டையும், அப்பா சட்டையையும் தான் நிச்சயம்அணிந்திருப்பான். அதுபோதுமே அடையாளம் கண்டுபிடிப்பதற்கு என்று மனசுக்குள்கணக்குப் போட்டுக் கொண்டு, ரயில் நிலையத்தை நோக்கி சைக்கிளில் விரைந்தனர்.

அவர்கள் போன நேரத்தில் திருடன் ரயிலுக்காக காத்திருந்தான். அதே பேன்ட்,சட்டையை அணிந்திருந்தான். "நான் தான் திருடன் என்று நெற்றியில் எழுதி ஒட்டாதகுறையாக அவனை அந்த உடைகள் அடையாளம் காட்டின. அவனை நெருங்கிச்சென்று பிடிப்பதற்குள் ரயில் வந்து விட, திருடனும் ஏறி விட்டான்.

ஆனாலும், செல்வராஜின் மகன்கள் ரமேஷ், பாஸ்கர் இருவரும் இன்னொருபெட்டியில் ஏறிக் கொண்டனர். அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் அந்தரயில் சரியாக 4 மணியளவில் திருவள்ளூர் நிலையத்தில் நின்றது.

ரயில் எப்போது நிற்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த இருவரும் சில விநாடிகள்கூட தாமதிக்காமல் கீழே இறங்கி திருடன் இருக்கும் பெட்டியில் ஏறினர்.

அங்கே திருடிய பணத்தை சாவகாசமாக உட்கார்ந்து எண்ணிக் கொண்டிருந்ததிருடனை பிடித்தனர். ஆனால், அவன் இருவரையும் தாக்கி விட்டு கிழே இறங்கிஓடினான். இவர்களும் ரயிலை விட்டு இறங்கி அவனை விரட்டினர். பிளாட்பாரத்தில்கொஞ்ச நேரம் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர். கடைசியில் திருடனைவிடாப்பிடியாக இழுத்து வந்து ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவனிடம் இருந்த 6 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டனர். தந்தையின்பணத்துடனும், பறிபோன பேன்ட், சட்டையுடனும் வீடு திரும்பினர் அந்த வீரமகன்கள்".

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X