ஆந்திர எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் சாகும் வரை உண்ணாவிரதம் வாபஸ்
ஹைதராபாத்:
சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஆந்திர சட்டப் பேரவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது உண்ணாவிரதத்தை திங்கள்கிழமை முடித்துக்கொண்டனர்.
ஆந்திராவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக இடது சாரி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
மின் கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும். அது வரை உண்ணாவிரதம் தொடரும் என்று அவர்கள் அறிவித்தனர். ஆனால், அவர்களது கோரிக்கையைஆந்திர அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
இதற்கிடையே உண்ணாவிரதம் இருந்த எம்.எல்.ஏ.க்கள் பலரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.11-வது நாளாக திங்கள்கிழமையும் உண்ணாவிரதம் தொடர்ந்தது.
இந் நிலையில், ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் கூட்டுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இடது சாரி கட்சியின் மாநிலச் செயலர் ராகவலு கலந்து கொண்டார்.
கூட்டத்தில் உண்ணாவிரதத்தைக் கைவிடுவது என்றும் உடனடியாக இம் முடிவை அமல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்குச் சென்று அங்கு மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவார்கள் என்றும்,மின் கட்டண உயர்வு வாபஸ் பெறும் வரை இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்றும் அவ் வட்டாரங்கள் தெரிவித்தன.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!