For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமாரமங்கலத்தைக் குணப்படுத்தியே அனுப்பினோம் .. கூறுகிறது அப்பல்லோ

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மத்திய மின் துறை அமைச்சராக இருந்த மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தை நாங்கள் முழுமையாக குணப்படுத்தித்தான் அனுப்பினோம் என்றுஅப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி தெரிவித்தார்.

வீட்டில் இருந்தபோது திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில்ரங்கராஜன் குமாரமங்கலம் சேர்க்கப்பட்டார்.

கோமா நிலையில் அங்கு சேர்க்கப்பட்ட அவர், நினைவு திரும்பாமலேயே இறந்தார். அவரது மரணத்துக்கு ரத்தப் புற்றுநோய்தான் காரணம் என்றுகண்டுபிடிக்கப்பட்டது.

அகில இந்திய மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் ரங்கராஜன்குமாரமங்கலம் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. அதுதான் அவரதுமரணத்துக்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இக் குற்றச்சாட்டை அப்பல்லோ மருத்துவமனையில் தலைவர் பிரதாப் சி. ரெட்டி மறுத்துள்ளார்.

ரங்கராஜன் குமாரமங்கலம் மரணத்துக்கு ரத்தப் புற்றுநோய்தான் காரணம் என்று அறியப்பட்டுள்ளது. எங்களது மருத்துவமனைக்கு கடுமையானகாய்ச்சலுடன் ஒரு சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டுத்தான் ரங்கராஜன் குமாரமங்கலம் கொண்டு வரப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு நல்ல சிகிக்சை அளித்து முழுமையாக குணப்படுத்தித்தான் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். எங்களது மருத்துவ சிசிக்சையில்எந்தக் குறைபாடும் இல்லை.

எங்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றபிறகுதான் அவருக்கு ரத்தப் புற்றுநோய் வந்துள்ளது. ஆனால், எல்லாவற்றுக்கும்அப்பல்லோ மருத்துவமனை மீது குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கு டெல்லியின் முன்னாள் முதல்வர் மதன்லால் குரானாதான் காரணம். அவர் சிபாரிசு செய்த ஒரு நோயாளிக்கு சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை அளிக்கநாங்கள் மறுத்துவிட்டோம். அந்த கோபத்தில்தான் குரானா இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.

எங்களிடம் வந்து சிகிச்சை பெற்றுச் சென்ற அடுத்த 4 மாதங்களில் ரங்கராஜன் குமாரமங்கலம் இறந்துவிடுவார் எங்களுக்குத் தெரியாது. ஒருவருடையஎதிர்காலத்தைப் பற்றி முன்பே தெரிந்து கொள்ள நாங்கள் ஜோசியர்கள் அல்ல.

எங்கள் மருத்துவமனைக்கு ரங்கராஜன் வந்தபோது அவருக்கு ரத்தப் புற்றுநோய் இருந்திருந்தால் அதற்கு நாங்கள் சிகிச்சை அளித்திருப்போம். அப்படிஇருந்திருந்தால் அவரால் நன்றாக வேலை செய்திருக்கமுடியாது. நீண்ட நாள் உயிரோடு இருந்திருக்க முடியாது.

ரத்தப் புற்றுநோய் முற்றிவிட்டால் ஒருவருக்கு 6 வாரத்துக்குள் மரணம் நிச்சயம். மருத்துவமனையை விட்டுச் சென்றபிறகுதான் ரங்கராஜன்குமாரமங்கலத்துக்கு ரத்தப் புற்றுநோய் வந்துள்ளது.

எங்களது சிகிச்சையில் எந்தக் குறைபாடும் இல்லை. அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. ரங்கராஜன் மரணம் குறித்து விசாரித்து வரும் 6 பேர்கொண்ட கமிட்டியிடம் அந்த ஆவணங்களை நாங்கள் வழங்கியுள்ளோம்.

அதிகமான காய்ச்சலுடன் ரங்கராஜன் கொண்டு வரப்பட்டதால் அவருக்கு மலேரியா காய்ச்சலாக இருக்கலாம் என்று கருதித்தான் நாங்கள் சிகிச்சைஅளித்தோம். இரண்டு வாரமாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ரங்கராஜன் 103 டிகிரி ஜுரத்துடன் கொண்டு வரப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளித்து 97.4 டிகிரி என்ற சராசரி நிலைக்குக் கொண்டு வந்தபிறகுதான் அவரை டிஸ்சார்ஜ் செய்தோம். ரத்தப்பரிசோதனையில் எந்த குறைபாடும் தெரியவில்லை.

நாங்கள் ரங்கராஜனை முழுமையாக குணப்படுத்தி அனுப்பினோம். அதன் பிறகு தான்பாத் நிலக்கரிச் சுரங்கத்துக்குள் சென்று அவர் பார்வையிட்டார்.வெளிநாட்டுக்கும் அவர் சுற்றுப் பயணம் சென்றார். அவரது உடலில் குறைபாடு இருந்தால் இதையெல்லாம் அவரால் செய்திருக்கமுடியாது.

அரசியல் ரீதியாக அப்பல்லோ மருத்துவமனை மீது அவதூறைப் பரப்பும் முயற்சியைச் சிலர் மேற்கொண்டுள்ளனர். இதற்கெல்லாம் மதன்லால்குரானாதான் காரணம். விரைவில் உண்மை தெரியவரும் என்றார் ரெட்டி.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X