For Daily Alerts
Just In
சிறுவனை மீட்க முயன்ற 3 பேர் மூச்சுத் திணறி சாவு
ஈரோடு:
தோல்பதனிடும் தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யச்சென்ற சிறுவனைக் காப்பாற்றச் சென்ற மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இந்த துயரச் சம்பவம் பற்றிய போலீஸ் கூறிய விவரம் வருமாறு:
ஈரோடு ஏ.பி.அக்ரகாரத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலையில், கழிவுநீர்த்தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் ஒரு சிறுவன் ஈடுபட்டிருந்தான். அப்போதுஅவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
சிறுவன் மூச்சுத் திணறால் தவித்ததைப் பார்த்த மூன்று பேர் தொட்டிக்குள் இறங்கிசிறுவனைக் காப்பாற்ற முயன்றனர். சிரமப்பட்டு அவனை வெளியில் அனுப்பிவிட்டனர். ஆனால் இந்தச் சம்பவத்தில் அவர்கள் மூன்று பேரும் மூச்சுத் திணறிஇறந்தனர்.
யு.என்.ஐ.