எம்.பி. சீட்களை அள்ளுமா தமிழர் கட்சிகள்?
கொழும்பு:
தமிழர் கட்சிகள் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையுடன் தேர்தலில்போட்டியிடாவிட்டால் நாடாளுமன்றத்தில் ஒரு இடம் கூட கிடைக்காது என்று முக்கியதமிழர் கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், தமிழர்ஐக்கிய முன்னணிக் கட்சியும் இக்கருத்தைத் தெரிவித்துள்ளன. இரு கட்சிகளும்யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து போட்டியிடுகின்றன.
தேவானந்தா கட்சியின் தவராஜா கூறுகையில், யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை,தமிழர் கட்சிள் தனித்தனியாகப் போட்டியிட்டாலும் கூட தமிழர்களே வெற்றிபெறுவார்கள். ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அப்படி கிடையாது.
கிழக்கு திரிகோணமலை, அம்பாரை மாவட்டங்களில் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர்.சிங்களர்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்தால் தமிழர்களின்எண்ணிக்கையை விட அதிகமாகி விடும். எனவே இந்தப் பகுதிகளில் தமிழர் கட்சிகள்ஒற்றுமையாக இருந்து போட்டியிட்டால் மட்டுமே எதிர்பார்க்கும் வெற்றியைப் பெறமுடியும் என்றார்.
முக்கிய தமிழர் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர முன்னணிக் கட்சி ஏற்கனவே இருபிரிவாக பிரிந்து கிடக்கிறது. ஒரு பிரிவுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரனும், இன்னொருபிரிவுக்கு முன்னாள் வட கிழக்கு மாகாண முதல்வருமான வரதராஜ பெருமாளும்தலைவர்களாக உள்ளனர்.
வரதராஜ பெருமாள் தலைமையிலான பிரிவு வடக்கு யாழ்ப்பாணத்தில்போட்டியிடுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறது.
மற்றொரு கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் யாழ்ப்பாணத்தில்போட்டியிடுகிறது.
தமிழர் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரே குடையின் கீழ் போட்டியிட்டால், தமிழர்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் 20 எம்.பிக்கள் இருப்பார்கள். ஆனால் நிலைமைவேறு மாதிரியாக இருக்கிறது. தமிழர் கட்சிகள் அனைத்தும் பிரிந்து போய் களத்தில்உள்ளன என்கிறார் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் (பிளாட்) தலைவர்தர்மலிங்கம் சித்தார்த்தன்.
கிழக்கு மாகாணத்தில் இக்கட்சி போட்டியிடவில்லை. போட்டியில்லாமல்இருந்தால்தான் தமிழர்கள் வெற்றி பெற முடியும் என்பதால் போட்டியைத்தவிர்த்துள்ளது இக்கட்சி.
சித்தார்த்தன் இதுகுறித்துக் கூறுகையில், அனைத்துத் தமிழர் கட்சிகளும் சேர்ந்துபோட்டில் இறங்க நாங்கள் முயற்சித்தோம்.ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலைமுன்னணிக் கட்சி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் மட்டும் தனியாகநிற்கிறார்கள். பிளாட் கட்சியும், ஈழம் புரட்சிகர கட்சியும் சேர்ந்து தேர்தலில்போட்டியிடுகின்றன என்றார் சித்தார்த்தன்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!