கால் இறுதிக்குள் கால் வைத்தனர் செலஸ், வீனஸ்
நியுயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கால் இறுதியில் விளையாட பெண்கள் பிரிவில் மோனிகா செலஸ், வீனஸ் வில்லியம்ஸ், நதாலி தவுசியாத் ஆகியோர்தகுதி பெற்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் 6-2, 6-2 என்றநேர் செட்டுகளில் மாஜி செர்னாவையும், மோனிகா செலஸ்6-3, 6-4 ன்ெற நேர் செட்டுகளில் ஜெனிபர் காப்ரியாட்டியையும் தோற்கடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் நதாலி தவுசியாத் 6-3, 6-2 என்ற நேர் செட்டுகளில் அரான்சா சாஞ்சஸ் விகாரியோவைத் தோற்கடித்தார்.
முதல் நிலை வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிசுக்கும் சான்ட்ரின் டெஸ்டுட்டுக்கும் இடையேயான ஆட்டம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தஆட்டத்தில் ஹிங்கிஸ் 6-2, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார்.
ஆண்கள் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 3-வது சுற்று ஆட்டங்களில் மேக்னஸ் நார்மன், மாரட் சபின், கார்லோஸ் பெர்ரோ, நிகோலஸ் கீஃபெர்,வெய்ன் ஆர்துர்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
கார்லோஸ் மோயா-அலெக் கோரெட்ஜா மற்றும் டாட் மார்ட்டின்-செட்ரிக் பியோலின் ஆகியோருக்கு இடையேயான ஆட்டம் மழைகாரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆட்டங்களில் மோயாவும், மார்ட்டினும் முன்னிலையில் உள்ளனர்.
சனிக்கிழமை நடந்த 3-வது சுற்று ஆட்டங்களில் பீட் சாம்ப்ராஸ், தாமஸ் என்குவிஸ்ட், ஹெவிட், கிராஜிசெக் உள்ளிட்டோர் வெற்றி பெற்று 4-வதுசுற்றுக்கு முன்னேறினர்.
கஃபெல்நிகோவ், மார்சிலோ ரியாஸ், ஹென்மன் ஆகியோர் தோற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில்மைக்கேல் கேம்பில்லை 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டுகளில் மார்க் பிலிப்போஸிஸ் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான மூன்றாவது சுற்று ஆட்டங்களில் தேவன்போர்ட், மேரி பியர்ஸ், செரீனா வில்லியம்ஸ், ஹூபர், டோகிக் உள்ளிட்டோர் வெற்றி பெற்று4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
கோன்சிதா மார்ட்டினெஸ், அன்னா கூர்னிகோவா ஆகியோர் தோற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!