கருணாநிதியை எதிர்த்து பெங்களூரில் நாளை பந்த்
பெங்களூர்:
தமிழக முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை பெங்களூர் வரும்போது அவரைஎதிர்த்து பெங்களூரில் பந்த் நடத்த கன்னட அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
பல்வேறு கன்னட அமைப்புகளின் சார்பில் பெங்களூரில் புதன்கிழமை கூட்டம்நடந்தது. கூட்ட முடிவுக்குப் பிறகு, கன்ன பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பின்தலைவர் ஜனகரே வெங்கடராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகஅரசுதான் ராஜ்குமார் விடுதலையைத் தாமதப்படுத்துகிறது.
தமிழக முதல்வர் கருணாநிதியை எதிர்த்தும், தமிழக அரசை எதிர்த்தும்வெள்ளிக்கிழமை பெங்களூரில் முழு அடைப்பு நடத்துகிறோம். இது கர்நாடக அரசுக்குஎதிரான போராட்டம் அல்ல என்றார்.
தமிழக கார் மீது தாக்குதல்:
இதற்கிடையே, சென்னையைச் சேர்ந்தவரின் கார் மீது பெங்களூரில் தாக்குதல்நடத்தப்பட்டது.
சென்னையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர் வியாபார விஷயம் தொடர்பாக தனது காரில்பெங்களூர் வந்திருந்தார். மெஜஸ்டிக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்.புதன்கிழமை மாலை அவர் காரில் வெளியே சென்றபோது, காந்தி நகர் கனிஷ்காஹோட்டல் அருகே சிலர் கற்களை வீசித் தாக்கினர்.
இந்தத் தாக்குதலில் கார் கண்ணாடி உடைந்தது. பிரான்சிஸ் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.இதுகுறித்து உப்பார்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!