For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசாம் மாணவர்கள் போராட்டத்தால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கெளஹாத்தி:

அசாமில் மாணவர்கள் நடத்திவரும் போரட்டத்தினால் கச்சா எண்ணெய் உற்பத்தியும்,அதை மற்ற இடத்திற்கு எடுத்துச் செல்லும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அசாம் மாணவர் சங்கம் (ஏ.ஏ.எஸ்.யூ), 300 அசாம் இளைஞர்களுக்குஇந்திய எண்ணெய் கழகத்தில் (ஓஐஎல்) வேலை தர வேண்டுமெனக் கோரி 120 மணிநேர எண்ணெய் தடுப்பு போரட்டத்தை திங்கள் கிழமை காலை முதல் நடத்திவருகின்றனர்.

இதன்படி கச்சா எண்ணெய் உற்பத்தியையும், அதை மற்ற இடங்களுக்கு எடுத்துச்செல்வதையும் மாணவர்கள் தடை செய்து வருகின்றனர். மேலும் எண்ணெய்க் கழகபணியாளர்களையும் பணிக்குச் செல்ல விடாமல் மாணவர்கள் தடுத்து வருகின்றனர்.

பணியாளர்கள் வாகனங்கள் மீது கல்லெறிந்தும் அவர்களை தாக்கவும் முயற்சித்தனர்.எண்ணெய் கழகத்தின் தலைமையகமான துலிஜானில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த1,000 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அசாம் எண்ணெய்க் கழகத்தில், கச்சா எண்ணெய் உற்பததி நிறுத்தப்பட்டால் அதன்மூலம் அரசுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவம் 300 மில்லியன் ரூபாய் வரைஇழப்பு ஏற்படும்.

இந்தியாவில் வருடத்திற்கு 60 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்திசெய்யப்படுகிறது. இது இந்தியாவின் ஆறு மாதத் தேவையை மட்டுமே பூர்த்திசெய்கிறது.

எண்ணெய்கழக செய்தித் தொடர்பாளர் பிரசாந்தா பராகாகோடி கூறுகையில், அசாமில்3.3 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. தினந்தோறும் 11,300கிலோலிட்டர் கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. எல்லா இடங்களிலும் தேவையானபணிகள் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் நடப்பதற்கான எல்லாநடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றார்.

ஆனால் அசாம் மாணவர் சங்க தலைவர் ஹிட்டேஸ்வர் புகான் கூறுகையில் , எங்களதுபோராட்டம் வெற்றி பெற்றுள்ளது. போராட்டம் பல எண்ணெய் தளங்களிலும் கச்சாஎண்ணெய் உற்பததியை பாதித்துள்ளது. திங்கள்கிழமை மாலையில் கச்சா எண்ணெய்சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் முடக்கப்பட்டுவிடும் என தெரிவித்தார்.

போலீசாரும், புற ராணுவ படை வீரர்களும் தீவிர பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X