For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

நோயால் இறப்போரின் எண்ணிக்கையை விட, விபத்தில் இறப்போரி ன் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க அரசு சட்டங்களில்போதுமான திருத்தம் செய்யப்பட வேண்டும் என கோவையில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஆனந்தகண்ணன் பேசினார்.

கோவை மெடிக்கல் சென்டர் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக துணைவேந்தர் ஆனந்தகண்ணன் பேசியதாவது:

சாலை விபத்துகள் மனித உயிர்களைப் பறிக்கக் கூடியதாக மாறி வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும் 2020ம் ஆண்டிற்குள் நோயால் இறப்போரின்எண்ணிக்கையைக் காட்டிலும், விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு 48 ஆயிரம் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில், 6 ஆயிரத்து 528 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 1993ம் ஆண்டு, 34 ஆயிரம்விபத்துகளில் 8 ஆயிரத்து 700 பேர் பலியாகியுள்ளனர்.

விபத்தின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், உயிரிழப்பு குறைந்துள்ளது. தகவல் தொடர்பின் வளர்ச்சியாலும், நவீன மருத்துவத் தொழில்நுட்பம்காரணமாகவும் பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இன்னும் மருத்துவ தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற வேண்டும். பல ஆராய்ச்சிகள் இந்ததுறையில் மேற் கொள்ளப்பட்டால் தான் விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கையை கணிசமாக தவிர்க்க இயலும்.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாத காலத்தில், 162 பேர் இறந்துள்ளனர். எனவேவிபத்துக்களைத் தவிர்க்க அரசு புதிய கொள்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

இந்தக் கொள்கை மூலம் மக்களின் உயிர்களைக் காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலை விபத்தில் காயமடைந்தவர்களை அந்தந்தஇடங்களில் உதவி செய்ய தன்னார்வ தொண்டு நிறுனங்கள் முன் வர வேண்டும். மேலும், இவர்களுக்கு உதவ மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

விபத்துகள் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. தனி மனிதன் வாழ்வில் மருத்துவ செலவு, உற்பத்தி இழப்பு, இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்குபண இழப்பு, நஷ்ட ஈடு ஆகியவை ஏற்படுகின்றன. எனவே, விபத்துக்களை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்என்றார். கருத்தரங்கில் கோவை மெடிக்கல் சென்டர் டாக்டர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு நன்றி கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X