For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூடுபிடிக்கும் இந்தியன் வங்கி வழக்கு: கலக்கத்தில் த.மா.கா

By Staff
Google Oneindia Tamil News

இது நடந்தது 1996-ம் ஆண்டு இறுதியில் அதாவது, த.மா.கா உதயமான ஆறாவது மாதம் இது நடந்தது. கிட்டதட்ட நான்கரைவருடங்களுக்கு முன்பு நடந்த விஷயத்தை இப்பொழுது நினைவுபடுத்தி பேசுகிறார்கள் த.மா.கா பிரமுகர்கள்.

முதலில் பேசிய த.மா.கா பிரகருக்கு அருகில் இருந்த த.மா.கா எம்.எல்.ஏ சொன்னார், கிட்டதட்ட எல்லாத்தையுமே மறந்து முழுநேரமாக அரசியலில் செயல்பட்டுக்கொண்டிருந்தோம். தி.மு.கவுடன் கூட்டணி என்பது நீண்ட காலத்திட்டமில்லை. அப்படியேதொடர்ந்தாலும் அ.தி.மு.கவுடன் இப்போது காங்கிரஸ் கட்சி இருப்பது மாதிரி த.மா.காவும் தி.மு.கவுடன் இருக்கின்ற ஒரு கட்சிஎன்றாகிவிடும்.

காமராஜர் ஆட்சி என்பதுதான் எங்களின் கனவு. லட்சியம் எல்லாமே. இந் நிலையில் தி.மு.கவுடன் கூட்டணி என்பது தொடரமுடியாது என்பது நன்றாகவே தெரிந்துதான் தி.மு.கவில் இருந்து வெளியேறினோம். இப்பொழுது அ.தி.மு.கவுடன் கூட்டணிஎன்றாலும் எதிர்காலத்தில் அதுவும் சரிவராது என்று எங்களுக்குத் தெரியும். அ.தி.மு.கவுடன் கூட்டணி வேண்டாம் என்றுஅப்போதே பலர் சொல்லியும் தடுக்கமுடியாமல் போய்விட்டது என்றார் அந்த எம்.எல்.ஏ.

இப்போது தொடர்ச்சியாக போராட்டம். மூன்றாவது அணி என்று சீரியஸாக தலைவர் அரசியல் களத்தில் இறங்கிவிட்டார்மூப்பனார். த.மா.காவின் ஒவ்வொரு வளர்ச்சியும் தி.மு.கவுக்கு எதிரானதாகவே நினைக்கிறார்கள் தி.மு.க தலைவர்கள்.

இந்தப் பின்னணியில் தான் மறுபடியும் உயிரூட்டப்பட்டிருக்கிறது இந்தியன் வங்கி விவகாரம் என்கிறார்கள் த.மா.காவினர்.இந்தியன் வங்கி ஊழலில் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள 25 வழக்குகளை விரைவாக விசாரித்து நீதி வழங்க ஏது வாக சென்னையில்தனி நீதிமன்றம் அமைக்க மத்திய அரசு சம்மதித்து உள்ளது.

இந்தியன் வங்கி ஊழல் தொடர்பாக 25க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னையில் ஒரு தனி நீதி மன்றம்விரைவில் ஏற்படுத்தப்படும் என்று சி.பி.ஐ இயக்குனர் ராகவன் டெல்லியில் அறிவித்தார். தனி நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டுஆறுமாதத்திற்குள் வழக்குகளை முடித்துவிட தீர்மானித்திருக்கிறதாம் மத்திய அரசு.

தீடீரென்று டெல்லியில் இருந்து வந்த இந்தத் தாக்குதலில் த.மா.காவினர் ஆடித்தான் போயிருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும்ஆறு மாதங்களே இருக்கின்ற நிலையில் இந்தியன் வங்கி ஊழல் வழக்குகள் த.மா.கா பிரமுகர்கள் மீதும் திரும்புமோ என்றுகலங்கிப் போயிருக்கிறார்கள்.

நடப்பது நடக்கட்டும் இதெல்லாம் தி.மு.கவின் சதி. போதாத குறைக்கு, கோபாலகிருஷ்ணனும், முன்னாள் அமைச்சர்கண்ணப்பனுடன் சேர்ந்து மக்கள் தமிழ் தேசம் என்று கட்சி ஆரம்பித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை அரசியலில்தலையெடுக்க விடக் கூடாது. கோபாலகிருஷ்ணன் மீது உள்ள வழக்குகளை தீவிரமாக்கினால், த.மாகாவுக்கும் சிக்கல்.தேர்தலுக்குள் வழக்கை முடித்து தீர்ப்பை மக்களுக்குச் சொல்வோம். மக்கள் புரிந்து கொள்வார்கள். தேர்தல் நேரத்தில், மூப்பனார்,த.மா.காவினர் மீதுள்ள க்ளீன் இமேஜை குலைப்பதற்கு நடக்கும் திட்டமிட்ட சதி தான் இது என்கிறார்கள் த.மா.காவினர்.

இந்த வழக்கு விவகாரங்கள் சூடுபிடிப்பதற்கு முன்பாக த.மா.காவின் ழுமையான அரசியல் செல்வாக்கை காட்டிவிடவேண்டும்என்பதில் கவனமாக இருக்கிறார்கள் த.மா.காவினர். இதுவரையில்லாத ஒரு பெரிய வேகத்துடனும், அரசியல்ரீதியாகவும்இந்தப்போராட்டம் இருக்கும் என்று உறுதியாகச்சொல்லும் த.மா.காவினர்.

இதில் என்ன அரசியல்ரீதியான பார்வை இருக்கிறது என்பது புரியவில்லை. ஐயா, இந்தியன் வங்கியில் 800 கோடி கடன்கொடுக்கப்பட்டது. அது திரும்ப வரவில்லை. நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு யார் யார் காரணம், யார் யார் பணம்கட்டவில்லை என்பதை அரசு விசாரிக்காதா? இதைப்போய் அரசியல் அது இது என்று வேறு கண்ணோட்டத்துடன் பார்க்ககூடாது.மூப்பனார் பாணியிலேயே சொல்வதானால்.. சட்டம் தன் கடமையைச் செய்கிறது அவ்வளவு தான் என்கிறார்கள் தி.மு.கவினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X