• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆல்ப்ஸ் மலையும்... ஆனைமலை அடிவாரமும்...

By Staff
|

ஆ. காதர் கான்

இன்று எந்தத் தொழில்துறை என்றாலும் அது எவ்வளவு தூரத்துக்கு வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கிறதோ அந்தஅளவுக்குத் தான் அது வெற்றியையும் பெற முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. இதற்கு சாப்ட்வேர் துறையும்விதிவிலக்கல்ல.

பொருளாதார தாராளமயமாக்கலும் சர்வதேசப் பொருளாதாரம் என்ற சித்தாந்தமும் தான் உலகம் இன்று ஜபம்செய்கிற வார்த்தைகள். இரும்புத்திரை போட்டுக் கொண்டு தனித்து நின்றிருந்த சீனா இன்று டபிள்யு.டி.ஓ.வில்(world trade organisation) இடம் பிடிக்கவும் அதிலிருந்து அதிகபட்ச சலுகைகளை அள்ளிச் செல்லவும்அமெரிக்காவுடன் சண்டை போட்டு வருகிறது.

முதலீடு செய்ய யாராவது முன்வந்தால் அவர்களை கொத்திக் கொண்டு போகக் காத்திருக்கின்றன பல நாடுகள்.இதில் அதிக சலுகையும், போட்ட பணத்துக்கு பாதுகாப்பும், அதிக லாபமும் கிடைக்கும் நாடுகளைத் தான்முதலீட்டாளர்கள் நாடிச் செல்கின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை தொழில்துறையில் முதலீடு செய்ய வரும் அன்னிய நிறுவனங்களிடம் ஆளும்கட்சிஅரசியல்வாதிகள் கமிஷன் கேட்டு மிரளச் செய்வது வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் இது கொஞ்சம்அதிகமாகவே இருந்து வந்தது. இதனால், வந்த வேகத்திலேயே தமிழகத்தை விட்டு பல முதலீட்டாளர்கள் திரும்பிப்பார்க்காமல் ஓடிப்போயுள்ளனர்.

இந்த நிலை இப்போது கொஞ்சம் மாறியுள்ளது. அன்னிய முதலீடு இல்லாமல் வண்டி ஓடாது என்பதை அரசுகள்நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டன. டாலர்களோடு வரும் முதலீட்டாளரை தூக்கிக் கொண்டு போக பலமாநிலங்கள் அடிதடியில் இறங்கும அளவுக்குப் போய்விட்டது நிலைமை. இதனால், முதலீட்டாளரை மிரளச்செய்யும் கமிஷன் அரசியல் கொஞ்சம் ஓரம் கட்டியுள்ளது.

இந்த வெள்ளை வேட்டி-----, வெள்ளை சட்டை, கலர்த் துண்டுகளின் தொல்லை குறைந்துள்ளதாலும் தமிழகத்தின்சாப்ட்வேர் ஆட்களின் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவும் அரசின் மீதுள்ள நல்ல அபிப்ராயம் காரணமாகவும்தமிழகத்தில் ஐ.டியில் அன்னிய முதலீடு கொட்ட ஆரம்பித்துள்ளது.

சாப்ட்வேர் மாநிலங்கள் என்று அழைக்கப்படும் கர்நாடகம், ஆந்திராவை விட தமிழகத்திற்கு வரும் அன்னியமுதலீட்டின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் சாப்ட்வேர் வளர்ச்சி விகிதமும் இந்த மாநிலங்களைவிடஅதிகமாகவே உள்ளது.

1997-98ம் ஆண்டில் ரூ. 400 கோடியாக இருந்து தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி 98-99ம் ஆண்டில் 3 மடங்காகிரூ. 1,246 கோடியாக அதிகரித்தது. முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்திலும் தங்களது கிளைகளைஉருவாக்கி வருகின்றன. இந்தக் கிளைகள் மூலம் மட்டும் ரூ. 896 கோடி வரை தமிழகத்துக்கு முதலீடாகவந்துள்ளது.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகும் சாப்டவேரில் 76 சதவீதம் அமெரிக்காவுக்குத் தான் செல்கிறது. சென்னையில்உள்ள சுமார் 37 சிறிய நிறுவனங்கள் தலா ரூ. 1 கோடி அளவுக்கு சாப்ட்வேரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துகாட்டியுள்ளன.

9-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 2000-2001ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து ரூ. 13,000 கோடிஅளவுக்கு சாப்ட்வேர் எழுதப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது இந்தியா அளவில் பார்த்தால் தமிழகத்தின் மொத்த ஹார்ட்வேர் உற்பத்தி 7 சதவீதமாகத்தான் உள்ளது.2002ம் ஆண்டில் இதை 30 சதவீதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் பார்த்தால் தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதியின் மதிப்பு வெறும் 0.035சதவீதம் (1998ம் ஆண்டுகணக்குப்படி) மட்டுமே. சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யும் நாடுஅயர்லாந்து. இந்த நாட்டின் மக்கள் தொகை தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 4-ல் 1 பகுதி தான்.

இன்னொறு ஆச்சரியமான புள்ளி விவரம், அயர்லாந்து நாட்டில் சாப்ட்வேர் துறையில் உள்ள மொத்த நபர்களின்எண்ணிக்கை 15,000 மட்டுமே. தமிழ்நாட்டில் வீட்டுக்கு ஒருவர் சாப்ட்வேர் என்ற அளவுக்கு எண்ணிக்கை முழிபிதுங்குகிறது. இருந்தும் அயர்லாந்து ஆல்ப்ஸ் மலை உயரத்திலும் நாம் ஆனைமலை அடிவாரத்திலும் இருக்கஎன்ன காரணம்?

அடுத்த வாரம் பார்ப்போம்...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more