For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்ய பிரான்சுக்கு மகாஜன் அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஓர் எதிர்க்கட்சி நடத்துகிற ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றின் போது, பொதுச்சொத்து நாசம் செய்யப்பட்டால், அதற்கானபொறுப்பை அக்கட்சிதான் ஏற்க வேண்டும் ; நஷ்ட ஈடு தரவேண்டும் - என்று கூறுகிற சட்டம் ஒன்று வந்தது. வந்ததோடு சரி.வழக்கு வந்ததால், இப்போது அச்சட்டம் உறங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை பஸ்கள் எரிந்த பிறகு, அந்த சட்டத்திற்குஉறக்கம் கலையுமோ - தெரியாது.

இது ஒரு புறமிருக்க, அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் நடத்துகிற இம்மாதிரி அராஜகங்கள் தொடர்பாக, மிகவும் கவலைக்குரியவிஷயம் ஒன்று உண்டு. ஒரு கட்சி, ஏதோ ஒரு விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றால் - நாலு பஸ் எரிந்தால்தான், அந்த எதிர்ப்புக்குபத்திரிக்கைகளில் முக்கியத்துவம் கிடைக்கிறது.

இன்ன கட்சி போராட்டம் - நான்கு பஸ்கள் தீக்கிரை என்று அது தலைப்புச் செய்தியாகிறது. அமைதியாக எதிர்ப்புதெரிவிக்கப்பட்டால், அது உப்பு சப்பு இல்லாத விஷயமாக பத்திரிக்கைகளால் கருதப்படுகிறது ; மருமகளுக்கு பெட்ரோல் ஊற்றிமாமியார் செய்த கொலை - இளம் காதலர்கள் தற்கொலை - போன்ற செய்திகளுக்கிடையே, நான்கு வரிகளில் இன்ன கட்சி எதிர்ப்பு என்று பழம்பெரும் எழுத்தாளரின் மணிவிழாச் செய்தி மாதிரி, கடனே என்று அச்செய்தி வெளியிடப்படுகிறது. ஆக, வன்முறைஇல்லையென்றால், பத்திரிக்கையின கவனம் இல்லை.

மக்களும் இவ்வாறே நடந்து கொள்கிறார்கள். ஓர் எதிர்பபு என்றால் - அதில் வன்முறை இல்லாமற் போனால் அந்த எதிர்ப்புபலவீனமானதாக மக்களால் கருதப்பட்டுவிடுகிறது.

அமைதியான எதிர்ப்பு என்றால், அதைத் தெரிவித்த கட்சியின் பலம் பற்றி, மக்கள் மனதில் சந்தேகம் வந்து விடுகிறது.என்ன?ராமதாஸ் மேலே தாக்குதலுக்கு - பா.ம.க.வில் ஓர் எதிர்ப்பையும் காணோமே? ஏதோ ஊர்வலம் விட்டாங்களாம்! வீக்காபோயிட்டாங்க போலிருக்குது ... என்ற பேச்சு வந்துவிடும். இதுவே வன்முறை கலந்த எதிர்ப்பு என்றால், மரியாதை வருகிறது.

என்னப்பா இது! நாலு பஸ்ஸை எரிச்சுட்டாங்க! பெரிய ரகளை போலிருக்குது ... ராமதாசுக்கு ன்னு ஒரு சப்போர்ட் இருக்குதுபா! அதைஒண்ணும் பண்ணிக்க முடியாது ...

... மதுரையில ஏழு பஸ்களை கொளுத்திட்டாங்களாமே! அடேயப்பா! அழகிரிக்கு அவ்வளவு சப்போர்ட் இருக்குதா? நான் என்னமோநினைச்சுட்டேன் ...

... ஜெயலலிதாவுக்கு இன்னும் அப்படியோதான் இருக்குது ஆதரவு ...பாரேன் ... தர்மபுரியில என்னா ரகளை பண்ணிட்டாங்க ...

என்ற மரியாதை கலந்த, பிரமிப்பு பேச்சுக்கள் மக்களிடையே எழ வேண்டுமானால், நாலு பஸ் எரிய வேண்டும் ; மூன்று போலீசார்மண்டை உடைய வேண்டும். ஒரு பிணம் விழுந்தால் இன்னும் விசேஷம் ; அதை வைத்துக் கொண்டு ஆதரவைப் பெருக்கிக் கொள்ளலாம்.

இந்தக் கேடு கெட்ட நிலையில்தான் நாம் இருக்கிறோம். எதிர்ப்பு, கண்டனம், போராட்டம் என்ற பெயர்களிட்டு ரவுடித்தனத்தைகவுரவப்படுத்துகிறோம்.

நமது இந்த போக்கு மாற வேண்டும். அரசியல் காரணத்துக்காகச் செய்யப்படுவதால் மட்டும் ரவுடித்தனம், போராட்டம்ஆகிவிடாது ; அதைச் செய்பவன் தலைவனாகிவிட மாட்டான். என்ன காரணத்திற்காகச் செய்யப்பட்டாலும் ரவுடித்தனம்,ரவுடித்தனம்தான் ; அதைச் செய்பவன் ரவுடிதான்.

இதை தேர்தல் சமயத்தில் நாம் மறக்காமலிருந்தாலே போதும் - அரசியலில் வன்முறை குறைய வழி ஏற்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X