For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீர்ப்பு ஒன்று - எண்ணங்கள் இரண்டு !

By Staff
Google Oneindia Tamil News

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங்ஆகியோருக்கு எதிரான விசேஷ நீதிமன்ற தீர்ப்பு, இரண்டு விதமான எண்ணங்களைநம் மனதில் தோற்றுவிக்கிறது.

பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி பலத்தை நிரூபிப்பதற்காக ஜார்கண்ட் முக்திமோர்ச்சாவைச் சார்ந்த சில எம்.பி.க்களுக்குப் பணம் கொடுத்து, அவர்களுடையஆதரவை நரசிம்ம ராவ் பெற்றார் என்பது வழக்கு. அதில் நரசிம்ம ராவ், பூட்டா சிங்ஆகியோர் குற்றச் சதி செய்தனர் என்பதும் ஊழல் நடக்க துணை நின்றனர் என்பதும்நிரூபிக்கப்பட்டிருப்பதாக விசேஷ நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. இதற்கானதண்டனை பற்றிய உத்தரவு பின்னர் வரும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பின் மூலமாக சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயர்ந்த தத்துவம்மிகவும் திடமாகவே நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது - என்பது நமக்குத் தோன்றுகிறமுதல் எண்ணம்.

பிரதம மந்திரியே ஆனாலும், குற்றம் புரிந்தவர் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்பதுசட்டத்தின் மாட்சிமையை பறை சாற்றுகிறது.

இந்த முதல் எண்ணம் ஒரு புறமிருக்க, சட்டத்தின் பார்வையில் ஒரு கோளாறுஇருப்பதாகவும் நமக்குத் தோன்றுகிறது - இது இரண்டாவது எண்ணம்.

பூட்டா சிங்குடன் பெங்களூரிலிருந்து பணத்தோடு டெல்லிக்குப் பயணம் செய்ததொழிலதிபர்கள் இருவர், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் விடுதலையாகிஇருக்கிறார்கள்.

சட்டம் திருப்தி அடைவதற்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட சாட்சியம் தேவை.கண்கூடாகத் தெரிகிற விஷயத்திற்கு கூட சட்டத்தைத் திருப்தி செய்யும் வகையானசாட்சியம் கிட்டாமற் போகலாம்.

குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்தநிலைமை கூட ஏற்கப்படலாம். ஆனால் ஏற்கப்பட முடியாத ஓர் அம்சமும் இவ்வழக்கில் இருக்கிறது.

பாராளுமன்றத்தில் நரசிம்ம ராவ் அரசை ஆதரித்து ஓட்டளிப்பதற்காக பணம் வாங்கிக்கொண்ட எம்.பி.க்களை, சட்டம் அணுக முடியாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்கூறி விட்டதால், இந்த வழக்கில் அவர்களுக்குச் சம்பந்தம் இலலாமல் போய்விட்டது -இதைத்தான் ஏற்க முடியாத நிலை என்று நாம் சொல்கிறோம்.

பாராளுமன்ற அங்கத்தினர்களுக்குள்ள உரிமை - அவர்கள் பாராளுமன்றத்தில்செய்யக்கூடிய குற்றங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது. அப்படி இருந்தும் கூட,அவர்களுடைய உரிமை அவர்களை பாதுகாப்பதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதுஏற்கத்தக்கதல்ல என்று, அந்த தீர்ப்பு வந்தபோதே நாம் கருத்து தெரிவித்தோம்.

இப்படி ஒரு தீர்ப்பு வந்ததன் காரணமாக, ஓட்டளிக்க பணம் கொடுத்தவர்கள்தண்டனைக்குள்ளானாலும், பணம் பெற்று ஓட்டளித்தவர்கள் குற்றமற்றவர்கள் என்றஅபத்தமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

பணம் வாங்கியவர்களுக்கு அளிக்கப்படுகிற இந்த சலுகை, பணம்கொடுக்கப்படுகிறவர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி. இது நமது மனதில் இந்தவழக்கு தோற்றுவிக்கிற இரண்டாவது எண்ணம்.

நரசிம்ம ராவ், பூட்டா சிங் ஆகியோர் தரப்பில் அப்பீல் செய்யும் போது, இப்போதுவந்துள்ள தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறதா அல்லது ரத்தாகிறதா என்பது பொறுத்திருந்துபார்க்க வேண்டிய விஷயமென்றாலும் - தவறு செய்தவர் பிரதம மந்திரியாக இருந்தவர்என்றாலும், அவர் சட்டத்தின் முன் பதில் அளிக்க வேண்டியவரே என்ற நிலைஉருவாகி இருப்பது - நாட்டின் நீதி அமைப்பைப் பற்றிய நம்பிக்கையை வளர்க்கஉதவும்.

ஆனால், இந்தத் தீர்ப்பு சரித்திரம் படைத்திருக்கிறது என்றும், ஒரு சாதனைபுரியப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிற கருத்துக்களோடு நமக்கு உடன்பாடுஇல்லை.

பிரதம மந்திரியாக இருந்த ஒருவர் மீது இப்படி ஒரு வழக்கு வருவதும், அவர்தண்டனை பெறுவதும் பெருமைக்குரிய விஷயங்கள் அல்ல. உயர் பதவிகளில்இருப்பவர்கள் இம் மாதிரி குற்றங்களைச் செய்யவே மாட்டார்கள் என்ற நிலை ஒருகாலத்தில் தோன்றினால் - அதுதான் சரித்திரம் படைக்கும். அதுதான் பெருமைக்குரியவிஷயமாக இருக்கும்.

ஆகையால் இப்போது சரித்திரம் படைக்கப்பட்டிருக்கிறது என்று பலர் கூறினாலும்,சாபம் தொடர்கிறது என்று தான் நாம் நினைக்கிறோம். மிக உயர்ந்த மட்டத்திலிருந்து,மிகத் தாழ்ந்த மட்டம் வரையில் பரவிக் கிடக்கிற ஊழலிலிருந்து விடுபடுகிற சாபவிமோசனம் நமக்கு இன்னமும் கிட்டவில்லை. இந்த வழக்கும் அதற்கு ஒரு சான்று.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X