For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நினைத்தேன் எழுதுகிறேன்

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: த.மா.கா.வின் எதிர்காலம் என்ன?

ப: ஜெயலலிதாவின் எதிர்காலம் என்ன என்று கேட்க நினைத்தால், அதை நேரிடையாகக் கேட்க வேண்டியதுதானே?

கே: எங்களைக் கேட்காமல் கேஸ், பெட்ரோல் விலைகளை உயர்த்துவதா - என்று கூட்டணிக் கட்சிகள் எல்லாம் கண்டனக் குரல்கொடுக்கும்போது, கருணாநிதி மட்டும் இன்னும் வாய் திறக்காமல் இருப்பது - இன்றைய சூழ்நிலையில் சரியா?

ப: இந்த மாதிரி விஷயங்களில் மத்திய அமைச்சர் மாறன் என்னை மாதிரி. இவை தவிர்க்க முடியாதவை என்பதை அவர் உண்ர்ந்திருக்கிறார். அவர்சொல்லித்தான் தி.மு.க. இதை எதிர்க்காமல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இது யூகம் ; செய்தி அல்ல

கே: த்ரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினால், மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா?

ப: ஆபத்து ஏற்படாது. அவர் விலகினாலும் கூட ஆட்சி கவிழாமல் இருக்குமளவுக்கு மெஜாரிட்டி பலம் இருக்கிறது. ஆனால் சங்கடம் ஏற்படும். இனி என்ன ஆகுமோ ? என்ற நினைப்பைக் கிளறி விடும். இது ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு நல்லது அல்ல.

கே: தங்களுக்கு திடீரென தலையில் முடி முளைத்து விட்டால். என்ன செய்வீர்கள்?

ப: மொட்டையடித்துக் கொள்வேன் - திருப்பதிக்குப் போய்.

கே: உண்மையை விரைவில் மூப்பனார் தெரிந்து கொள்வார் என்று முதல்வர் கருணாநிதி எதைக் குறிப்பிடுகிறார்?

ப: அவருக்கு என்ன பயமோ? எனக்கென்ன தெரியும்?

கே: எம்.ஜி.ஆரை நான் கடவுள் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறேன் என்று துரைமுருகன் கூறியுள்ளது பற்றி ...?

ப: என்ன செய்வது? கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களை தலைவர்களாக துரைமுருகன் ஏற்றதால், அவர் கடவுளை மறுக்க வேண்டியதாகிவிட்டதே!

கே: வாஜ்பாய் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டால், இடைக்காலப் பிரதமராக அத்வானி வர வாய்ப்பு இருக்கிறதா?

ப: அது ஒரு சாத்தியக்கூறு. நிர்பந்தம் அல்ல.

கே: நாட்டு நடப்பைப் பார்த்தால், மீண்டும் ஜெயலலிதாவே முதல்வராகி விடுவார் போலிருக்கிறதே?

பச இந்தத் தோற்றத்ததை ஏற்படுத்தியது கருணாநிதி அரசின் சாதனை.

கே: வாழ்வில் வெற்றி பெற ஏதாவது ஒரு மிக எளிய வழியைச் சொல்லுங்களேன்?

ப: பெற்றதை வெற்றி என நினைத்துக் கொண்டு விடுவதுதான் எளிதான வழி.

கே: கேரள பஞ்சாயத்துத் தேர்தலில் பி.ஜே.பி. கொஞ்சம் தளிர் விட்டிருக்கிறதே?

ப: ஆமாம் ; கொஞ்சம்.

கே; வீரப்பன் கடத்திச் சென்ற நாகப்பா தப்பி விட்டாரே?

ப: தப்பி வந்தாரோ, அல்லது தகவலுடன் வந்தாரோ... அது கிடக்கட்டும். உண்மை தப்பி வெளிவர மாட்டேன் என்கிறதே!

கே: டாக்டர் ராமதாஸ் தி.மு.க. அணியை விட்டு விலகுவாரா?

ப: எனக்கு அந்த சந்தேகம் பலமாக இருக்கிறது. இப்போதைய நிகழ்ச்சிகளினால் ஏற்பட்ட சந்தேகம் அல்ல இது. சில மாதங்களாகவே இதுபற்றிதுக்ளக் தெரிவித்துவருகிற சந்தேகம், இன்னமும் தீர்ந்தபாடில்லை.

கே: நெல்லையில், காமராஜூக்கு சிலை திறந்து வைத்து, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள முதல்வரின் பெருந்தன்மை பற்றி ...?

ப: நல்ல பெருந்தன்மை. காமராஜ் சுற்றுப்பயணம் செய்யும் இடங்களில் ஏ.சி. அறை கேட்டார் ; அதை நான் கொடுத்தேன் ; அதனால் காமராஜ் என்னைஎதிர்த்துப் பேச மறுத்து, பொதுக் கூட்டத்திற்குப் போவதையே தவிர்ததார் ... என்றெல்லாம் முதல்வர் பேசியிருக்கிறார் ,

புகழுரையா இது? காமராஜ் மீது கழகத்தினருக்கு அன்று ஏற்பட்ட கோபம் இன்னும் தீரவில்லை என்பதைத்தான், முதல்வரின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது. காமராஜை முதல்வர் கேவலப்படுத்தியிருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X