For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனை வலுப்படுத்தி விட்டார் கருணாநிதி ..பாய்கிறார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

பழ. நெடுமாறனை காட்டுக்குள் அனுப்பியதன் மூலம் வீரப்பனின் கைகள்வலுப்பெற்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார். மிகவும் காரசாரமான ஜெயலலிதாவின்அறிக்கை விவரம்:

வீரப்பன் கடத்திச் சென்றுள்ள கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையில்தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை காட்டுக்குள் தமிழக அரசுஅனுப்பியது.

தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர் அவர்.அப்படிப்பட்ட அவரை காட்டுக்குள் அனுப்பியதன் மூலம் தமிழ் தீவிரவாதஇயக்கங்களும், பிரிவினைவாத குழுக்களும் சேர்ந்து வீரப்பனின் கைகளைவலுவடையச் செய்துவிட்டன.

தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் தடைசெய்யப்படவில்லை என்றால், ஆந்திரா, மத்தியப்பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் நக்ஸலைட்டுகளால் ஒரு தனி ராஜ்ஜியம்நடத்தப்படுவதுபோல் தமிழகத்திலும் அத்தகைய ஒரு ராஜ்ஜியம் ஏற்பட்டுவிடும்.

கருணாநிதிக்கும் தமிழ்த் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாத சக்திகளுக்கும்இடையேயான சக்திகளால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தனித் தமிழ் தேச்ம்உருவாவதைத் தடுக்க மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு விடுதலைப் படை என்ற அமைப்புமுற்றிலுமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு மீட்புப் படையும்ஒழிக்கப்பட்டது.

ஆனால், இப்போது நடைபெறும் ஆட்சியால் அந்த அமைப்புகள் மீண்டும் தலை தூக்கஆரம்பித்துவிட்டன.

வீரப்பன் விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்பதைஉச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பயந்து கர்நாடக அரசு தெரிவித்தாலும், தமிழக முதல்வர்கருணாநிதி அதைச் செய்யமாட்டார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்தோற்றுவிடுவோம் என்று கருணாநிதி பயந்துவிட்டார். எங்கே நான் வெற்றி பெற்றுஆட்சிக்கு வந்துவிடுவேனோ என்ற பயத்தில் எனக்கு எதிரான நடவடிக்கைகளில்அவர் ஈடுபட்டுள்ளார்.

வீரப்பன் விவகாரத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்பும் அதேநேரத்தில் வீரப்பனுக்கு நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள் போன்றவற்றை கருணாநிதிசப்ளை செய்து வருகிறார்.

போலீஸ் நிலையத்தைத் தாக்கியது, போலீஸாரைக் கொன்றது, வெடிகுண்டு வைத்ததுபோன்ற பயங்கர குற்றங்களைச் செய்தவர்களை விடுவிக்க கருணாநிதி முயற்சிக்கிறார்.விடுதலையானதும் அவர்கள் எல்லாம் வீரப்பனுடன் சேர்ந்துவிடுவார்கள். அதுநாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதிக்கும் என்பதுமட்டுமல்லாமல் தேசிய பாதுகாப்புக்கும் ஊருவித்துவிடும்.

வீரப்பனைப் பிடிக்க எனது ஆட்சிக் காலத்தில் சிறப்பு அதிரடிப்படைஉருவாக்கப்பட்டது. இப்படையினரின் தீவிர நடவடிக்கையால் வீரப்பனின் பலம்150-ல் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டது. வீரப்பனிடம் மிகக் குறைந்த ஆயுதங்களேஇருந்தன.

ஆனால், கருணாநிதி ஆட்சி வந்தபிறகு சிறப்பு அதிரடிப்படையின் நடவடிக்கைநிறுத்தப்பட்டது. நான்கரை ஆண்டுகால ஆட்சியில் வீரப்பனைப் பிடிக்க எந்தமுயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றார் ஜெயலலிதா.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X