For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சின்னம்மா, பெரியம்மா .. அதிமுகவின் அமர்க்கள பொதுக்குழு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் செவ்வாய் கிழமை காலை கூடிய அதிமுகபொதுக் குழுவில் ஜெயலலிதாவும், சசிகலாவும் கூட்டாக கலந்து கொண்டனர்.

ஒரே மாடல் புடவை அணிந்திருந்த இருவரையும் பூரண கும்ப மரியாதையுடன் கட்சித்தொண்டர்கள், தலைவர்கள் வரவேற்றனர்.

ஜெயலலிதாவை பெரியம்மா என்றும், சசிகலாவை சின்னம்மா என்றும்பொதுக்குழுவில் பேசிய அதிமுக பிரகர்கள் வர்ணித்தனர்.

அதிமுகவில் அதிரடி நடவடிக்கையாக, தோழி சசிகலாவை, ஜெயலலிதா பொதுக்குழுஉறுப்பினராக்கி உள்ளார். ஜெயலலிதாவின் நிழலாக இருந்து திரைமறைவு அரசியல்நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சசிகலாவுக்கு பகிரங்க அங்கீகாரம் அளித்துகட்சியின் பொதுக்குழு உறுப்பினராக்கி உள்ளார் ஜெயலலிதா.

சசிகலாவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்த பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வடபழனி விஜயசேஷ மகாலில் செவ்வாய் கிழமை காலைநடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே காரில் காலை 11.15 மணிக்கு வந்திறங்கினர்.

இருவரையும் பூரண கும்ப மரியாதையுடன் மகளிர் அணியினர் வரவேற்றனர்.வாணவேடிக்கைகள், தாரை தப்பட்டைகள் முழங்க மலர் தூவி இருவரையும்மேடைக்கு அழைத்துச் சென்றனர் கட்சியின் முன்னணித் தலைவர்கள்.

அதிமுகவை இனி ஆளப் போகும் இந்த "சகோதரிகள் இருவரையும் வரிசையாகநின்று பொன்னாடைகள் அணிவித்து வரவேற்றனர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்பி.எச்.பாண்டியன், மலைச்சாமி, தினகரன் உள்ளிட்டவர்கள்.

கூட்டம் துவங்கியதும் மறைந்த நெடுஞ்செழியனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் அவைத் தலைவராக காளிமுத்து தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் பெறும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் நிறைவேறியதும் அவைத் தலைவர்என்ற முறையில் காளிமுத்து தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது.

புலவர் புலமைப்பித்தன் வரவேற்றுப் பேசினார். எம்ஜிஆரின் 47 ஆண்டு கால நண்பன்என்று தன்னை வர்ணிததுக் கொண்டே அவர் ஆரம்பித்த அதிமுகவை அழிக்கநினைக்கிறார் கருணாநிதி. இதன் மூலம் அவர் எம்ஜிஆரை அவமானப்படுத்திவிட்டார் என்றார். அவரது பேச்சை ஜெயலலிதாவும், சசிகலாவும் ஆர்வத்தோடுரசித்தனர்.

பின்னர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற முறையில் ஒவ்வொருவராக பேசத்துவங்கினர்.

ஜெயலலிதா என்ற நங்கூரம் இல்லையென்றால் அதிமுக என்ற கப்பல் மூழ்கியிருக்கும்.நங்கூரமாக இருந்து அதிமுகவை காப்பாற்றிய ஜெயலலிதாவுக்கு காலமெல்லாம் கட்சிகடமைப்பட்டிருக்கிறது. அந்த கட்சியின் தொண்டர்கள் என்ற முறையில் நாங்கள்அடிமைப்பட்டு கிடப்போம் என்று உணர்ச்சி பொங்க பலர் பேசினர்.

ஜெயலலிதாவை புகழ்ந்தும், அவருக்கு அளிக்கப்பட்ட டான்சி ஊழல் சிறைத்தண்டனை பற்றி ஆவேசமாகவும் பலர் பொரிந்து தள்ளினர். கருணாநிதியையும்,அவரது குடும்பத்தைப் பற்றியும் "பொளந்து கட்டினர்.

சந்தடிச் சாக்கில் தோழமைக் கட்சியான காங்கிரசையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. மத்தியில் மீண்டும் வாஜ்பாய் ஆட்சி வருவதற்கு காங்கிரசும், அதன்தலைவி சோனியாவும் தான் காரணம். அதிமுகவின் மாற்று ஆட்சி முயற்சிக்கு கைகொடுக்கத் தவறிய காங்கிரஸ் இப்போது கேவிக் கேவி அழுகிறது என்று கிண்டல்செய்தனர்.

பேசிய பலரும், சசிகலாவின் வரவையும், அவரால் கட்சிக்கும், ஜெயலலிதாவுக்கும்கிடைத்துள்ள பலத்தையும் பற்றி பெருமிதத்தோடு குறிப்பிட்டனர். ஜெயலலிதாவைஎந்த அளவுக்கு புகழ்ந்தார்களோ அந்தளவுக்கு சசிகலாவையும் புகழ் மலையின்உச்சிக்கே கொண்டு சென்றனர்.

ஜெயலலிதா என்ற பெயரை, அவரை விட வயதில் மூத்தவர் என்றாலும் கூட கட்சியில்யாரும் பயன்படுத்துவதில்லை. புரட்சித் தலைவி என்றும், அம்மா என்றும்அழைப்பதுண்டு. அதேபோல் சசிகலா என்ற பெயரையும் யாரும் தப்பித் தவறி கூடஉச்சரிக்கவில்லை. எல்லோரும் அவரை "சின்னம்மா என்று மரியாதையுடன்அழைத்தனர்.

இரண்டு "அம்மாக்கள் இருக்கும்போது வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காகஜெயலலிதாவை பற்றி குறிப்பிடும்போது "பெரியம்மா என்றும், சசிகலாவை பற்றிகுறிப்பிடும் போது "சின்னம்மா என்றும் வர்ணித்தனர். கட்சியினரின் இந்த மரியாதைகலந்த பேச்சை தோழிகள் இருவரும் பெரிதும் ரசித்தனர்.

சித்தி அரசியல்:

அதிமுகவை ஆட்டிப் படைக்கும் சசிகலா குடும்பத்தை சேர்ந்த தினகரன் ஏற்கனவேஜெயலலிதா பேரவைச் செயலாளராக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகவும்உள்ளார். தினகரனைத் தொடர்ந்து அவரது சித்தி சசிகலாவும் நேரடி அரசியலில்ஈடுபடத் தொடங்கி விட்டார்.

ஏற்கனவே தன்னுடைய உடன் பிறவா சகோதரி; உயிர்த் தோழி; குடும்பப் பெண்என்றெல்லாம் ஜெயலலிதாவால் பட்டம் சூட்டப்பட்ட சசிகலா, ஜெயலலிதாதலைமையில் நடந்த எல்லா கட்சிக் கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்.ஆனால், மேடையில் ஏறாமல் பின்பக்கம் உள்ள அறையில் அமர்ந்திருப்பார்.

இப்போது அவரும் ஜெயலலிதாவுக்கு சமமாக ஒரே மேடையில் அமரும் வகையில்அதிமுகவில் அவருக்கு அனுமதியும், அங்கீகாரமும் தரப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின்இந்த முடிவை ஆட்சேபிக்க அந்த கட்சியில் ஆளே இல்லை என்பது தான் அவருக்குகிடைத்த போனஸ் பாய்ன்ட்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X