For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷார்ஜா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

ஷார்ஜா:

ஷார்ஜா சாம்பியன்ஸ் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்விளையாட இந்தியா ஒருவழியாகத் தகுதி பெற்றது.

இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்து வரும் மூன்றுநாடுகள் ஒரு நாள் போட்டித் தொடர் கிளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது.இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஆனால் ஜிம்பாப்வேஅணியுடன் வியாழக்கிழமை நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா என்பதுகடைசி நிமிடம் வரை சந்தேகமாகவே இருந்தது.

இந்தியா இப்போட்டியில் டாஸ் வென்றது.ஆனால் முதல் நாள் அதிக பனிவிழுந்திருந்ததால், முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தார் கேப்டன் கங்குலி.ஜிம்பாப்வே பேட்டிங்கைத் தொடங்கியது. இந்திய பந்தவீச்சாளர்களின் இறுக்கமானபந்துவீச்சில் ஜிம்பாப்வே ரன்களைக் குவிக்கத் திணறியது.

கேப்டன் ஆலிஸ்டர் கேம்பல் மட்டுமே நிலைத்து ஆடினார். சிறுக, சிறுக அவர் சேர்த்தரன்களே அணி கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேம்பல் கடைசி வரைஆட்டமிழக்காமல் 105 ரன்களை எடுத்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்தாலும், மறு பக்கம், கேம்பல் நிலைத்து நின்று கொண்டிருந்தார்.

133 பந்துகளைச் சந்தித்து இந்த சதத்தை எட்டினார் கேம்பல். இதில் சுனில் ஜோஷியின்பந்தில் அடித்த ஒரு சிக்சரும் அடங்கும். இந்தியா இப்போட்டியில் வெற்றி பெற்றாலும்கூட கேம்பலே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கேம்பல் தவிர வேறு யாரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. கிரானட்பிளவர் 10 ரன்களில் பிரசாத் பந்தில், ராபின் சிங்கிடம் பிடி கொடுத்து விட்டுவெளியேறினார்.

மீண்டும் அணிக்கு வந்துள்ள பால் ஸ்டிராங், 17 ரன்களல் சுனில் ஜோஷி பந்துவீச்சில்வெளியேறினார். இதில் 2 பவுன்டரிகளும் அடங்கும்.

கேம்பலும், ஸ்டுவர்ட் கர்லிஸ்லியும் 50 ரன்களைச் சேர்த்தனர். கர்லிஸ்லி 20 ரன்கள்எடுத்திருந்த நிலையில் ஜாகீர் கானால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இறுதியில் 50 ஓவர்கள் இறுதியில், ஜிம்பாப்வே 218 ரன்களைச் சேர்த்தது. இந்தியகேப்டன் கங்குலி, மொத்தம் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். இந்தியாவின்புதிய வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான், பந்துவீச்சுக்கு தலைமை வகித்தார். 10ஓவர்கள் வீசி 40 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் கான்.

கடைசிப் போட்டியில் விக்கெட் எதையும் வீழ்த்தாத பிரசாத் இந்தப் போட்டியில் 2விக்கெட்டுகளை எடுத்தார். சுனில் ஜோஷிக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

பின்னர் 219 ரன்கள் என்ற எளிதா இலக்கை மிகவும் சிரமப்பட்டு எதிர்கொண்டதுஇந்தியா. துவக்கத்திலேயே சச்சின் டெண்டுல்கரும், புதிய வீரர் ஸ்ரீராமும் அவுட் ஆகிவிட்டனர். அப்போது அணியின் ஸ்கோர் வெறும் 18 ரன்களே.

கேப்டன் கங்குலியும், காம்ப்ளியும் பின்னர் நிலைத்து ஆடி ஸ்கோரை மெதுவாகஉயர்த்தினர். இருவரும் சேர்ந்து 106 ரன்கள் சேர்த்தனர். ஜிம்பாப்வேயின்பந்துவீச்சாளர் ஃபிரன்ட், இந்திய பேட்ஸ்மென்களுக்கு "எதிரியாக இருந்தார்.துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய பேட்ஸ்மென்களுக்குஇறுக்கத்தைக் கொடுத்தார்.

கேப்டன் கங்குலி, 98பந்துகளைச் சந்தித்து 66 ரன்களை எடுத்தார். இது அவருக்கு153-வது ஒரு நாள் போட்டி. 34 வது அரை சதமாகும். ஒரு சிக்சரும், நான்குபவுண்டரிகளையும் விளாசிய அவர் பிரன்ட் பந்தில் வீழ்ந்தார். ஒரு நாள் போட்டியில்6000 ரன்களை இந்த ஸ்கோர் மூலம் கடந்தார் கங்குலி.

காம்ப்ளியும் எளிதான முறையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கிரான்ட் பிளவர்பந்தை தூக்கி அடித்து கேட்ச் கொடுத்தார் காம்ப்ளி. 75 பந்துகளைச் சந்தித்த அவர் 60ரன்களை எடுத்தார். இதில் ஒரு சிக்சரும், நானகு பவுன்டரிகளும் அடங்கும்.

பின்னர் இந்தியா மீண்டும் தடுமாறியது. யுவராஜ் சிங், ராபின் சிங் ஆகியோர் சொற்பரன்களில் விழுந்தனர். 158 ரன்கள் எடுத்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்துஇந்தியா தடுமாறியது. அப்போது வந்தனர் தாஹியாவும், சுனில் ஜோஷியும்.இருவரும் சேர்ந்து விளையாடியப் பார்த்தபோதுதான் இந்தியா வெற்றி பெற்று விடும்என்ற நம்பிக்கையே வந்தது.

தாஹியாவும், ஜோஷியும் பொறுப்புடன் ஆடி ரன்களைச் சேர்த்தனர். தாஹியா 34பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்களை எடுத்தார். இதில் ஒரு பவுண்டரியும் அடங்கும்.அவரும் ஜோஷியும் சேர்ந்து 42 ரன்களைச் சேர்த்தனர். தாஹியா ஆட்டமிழந்தபோது,23 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்தியா இருந்தது.

பின்னர் ஜோஷியும், அகர்கரும் சேர்ந்து வெற்றி இலக்கை எட்டினர். அகர்கர் 11பந்துகளில 1 பவுண்டரியுடன் 16 ரன்களை எடுத்தார். ஜோஷி 30 பந்துகளில் ஒருபவுண்டரியுடன் 25 ரன்களை எடுத்தார்.

இந்த வெற்றி மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஜிம்பாப்வே கலந்துகொண்ட போட்டிகள் அனைத்திலும் தோல்வியுற்றதால் போட்டியிலிருந்துவெளியேறியது.

வெள்ளிக்கிழமை இந்தியாவும், இலங்கையும் கடைசி லீக் போட்டியில் சந்திக்கின்றன.இருப்பினும் இந்தப் போட்டியால் இரு அணிகளுக்கும் லாபமும் இல்லை, நஷ்டமும்இல்லை. இறுதிப் போட்டிக்கு ஒத்திகை பார்த்துக் கொள்ள இது உதவலாம். இறுதிப்போட்டி 29-ம் தேதி நடக்கிறது.

சுருக்கமான ஸ்கோர்:

ஜிம்பாப்வே - 218. (கேம்பல் 105, ஜாகீர் கான் 4 விக்கெட்டுகள்).

இந்தியா - 219 (கங்குலி 66, காம்ப்ளி 60, ஜோஷி 25, தாஹியா 20, ஃபிரன்ட் 3விக்கெட்டுகள்).

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X