For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைத் தமிழர் படுகொலைக்கு அமெரிக்க அமைப்புகள் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

இலங்கை பண்டாரவிளை மறுவாழ்வு முகாமில் 26 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு இலங்கைஅரசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்புகோரிக்கை விடுத்துள்ளது.

அக்டோபர் 25-ம் தேதி பண்டாரவிளை மறுவாழ்வு முகாமுக்குள் 3000-க்கும்மேற்பட்ட சிங்களர்கள் புகுந்தனர். அங்கு தங்கியிருந்து முன்னாள் விடுதலைப் புலிகள்அமைப்பினர் மீது சரமாரியாகத் தாக்கினர். இதில் 26 தமிழர்கள் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.

இலங்கையை மட்டுமல்லாது,உலகையே குலுக்கியது இந்த படுகொலைச் சம்பவம்.போலீஸாரும், ராணுவ வீரர்களும்தான் இந்த படுகொலைச் சம்பவத்திற்குக் காரணம்என்று விடுதலைப் புலிகள் ஏற்கனவே புகார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பாரபட்சமின்றி விசாரணை நடத்துமாறு அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவுக்கு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.ஆம்னஸ்டி அமைப்பு, அமெரிக்காவிலிருந்து செயல்படும் மனித உரிமைகள் நலஅமைப்பாகும்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இதுபோன்ற மறுவாழ்வு முகாம்கள் மற்றும் பல்வேறுமுகாம்களில் உள்ளவர்கள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும்.முகாம்களில் தங்கியிருப்போருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானது.

இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள் நேரிடாமல் எதிர்காலத்தில் மிகவும் கவனமாகசெயல்பட வேண்டும்.

பண்டாரவிளை முகாமில் சம்பவம் நடந்தபோது பாதுகாப்புக்கு இருந்த போலீஸார்மிகவும் கவனக்குறைவுடன் நடந்து கொண்டுள்ளனர். இத்தனை பேர்கொல்லப்பட்டதற்கு அவர்களும் ஒரு காரணம்.

பாதுகாப்புக்கு இருந்த சில காவல்துறை அதிகாரிகளும் கூட படுகொலைச் சம்பவத்தில்சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கிராமத்தினரை முகாமுக்குள் நுழையஅவர்களே கூட அனுமதித்திருக்கலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

மற்றொரு அமெரிக்க மனித உரிமைகள் நல அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்அமைப்பும் இலங்கை படுகொலையைக் கண்டித்துள்ளது. வன்முறைக்குக்காரணமானவர்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இலங்கையில்இனப் படுகொலை தொடரும் வாய்ப்பு உள்ளதாக அது எச்சரித்துள்ளது.

பதில் நடவடிக்கையில் இறங்குவதைத் தவிர்க்குமாறு விடுதலைப் புலிகள் உள்ளிட்டபிற அமைப்புகளை அது கேட்டுக் கொண்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவிட்டதற்காக அதிபர் சந்திரிகாவுக்கு இந்த அமைப்பு நன்றிதெரிவித்துக் கொண்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X