For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சலுகைகள் கட் .. சேலம் கைதிகள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் மத்திய சிறையில் கைதிகள் திடீர் உண்ணாவிரதம் இருந்ததால் பதட்டம் ஏற்பட்டுகாவல் பலப்படுத்தப்பட்டது.

சேலம் மத்திய சிறை தமிழகத்தில் உள்ள பெரிய சிறைகளில் ஒன்றாகும். இங்கு 1,500கைதிகள் உள்ளனர்.இந்த சிறையில் காவலர்கள் உதவியுடன் கைதிகள் சிகரெட், பீடி,போதைப் பொருட்கள் போன்றவைகளை கைதிகள் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.இவற்றை பெறுவதற்காக காவலர்கள், கைதிகளால் நன்கு "கவனிக்கப்பட்டனர் என்றுதெரிகிறது.

இந்தப் பொருட்கள் நூதனமான முறையில் சிறைக்குள் கடத்தப்படும். பீடி, சிகரெட், கஞ்சாஆகியவை புரோட்டாவுக்கு கொடுக்கப்படும் "சால்னா (சாம்பார் போன்றது) கவரில்வைத்துக் கொண்டு வரப்படும். பிராந்தி, ரம் போன்றவை பெப்சி பாட்டில்களிலும்,ஆப்பிளில் ஊசி மூலம் விஸ்கி ஏற்றப்பட்டும் கடத்தல்கள் நடப்பது வழக்கமாம்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிறைக்குள் கைதிகளைப் பார்க்க வரும்பார்வையாளர்கள், உணவு மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்பட்டது. சிகரெட் மற்றும்போதைப் பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்படவிலலை. இதனால் கைதிகள் அவதிப்படதுவங்கினர். வி.ஐ.பி. கைதிகளுக்கும் இதே நிலைதான்.

மூன்று நாட்களாகியும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. இதனால் கோபமடைந்தகைதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை உணவு சாப்பிட மறுத்தனர்.

கைதிகளுக்கு காலை 6.30 மணிக்கு காலை உணவும், பகல் 11.30 மணிக்கு பகல் உணவும்,மாலை 4.30 மணிக்கு இரவு உணவும் வழங்கப்படும். மாலை 6.30 மணிக்கு மேல் கைதிகள்சிறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தண்டனைக் கைதிகள் 150 பேருக்கும் மேற்பட்டோர் சாப்பிட வரமுடியாது என மறுத்துவிட்டனர். பலர் மரங்கள் மீது ஏறிக் கொண்டு போராட்டம் நடத்தினர். காவலர்கள்கைதிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இந்த போராட்டம் ரிமாண்டில்வைக்கப்பட்டிருந்தவர்களும் தெரிந்து அவர்களும் சாப்பிட மறுத்தனர்.

விடுமுறை நாளானதால் அதிகாரிளை தொடர்பு கொள்ள முடியவில்லை. பதட்டத்தை பயன்படுத்தி கைதிகள் தப்பி விடக்கூடும் என பயந்த போலீசார் வெளி, பின்பக்க கேட் போன்றமுக்கிய இடங்களில் காவலை பலப்படுத்தினர். கைதிகள் போராட்டம் காலை 6 மணி முதல்இரவு 8.30 மணி வரை தொடர்ந்தது.

அதிகாரிகள் திங்கள் கிழமை வந்தவுடன் பேசலாம் என்றபின் கைதிகள் இரவு உணவுசாப்பிட்டு தங்கள் செல்லுக்கு சென்றனர்.

திங்கள்கிழமை சிறை அதிகாரிகள் வந்தவுடன் அவர்களுக்கு கைதிகள் போராட்டம் பற்றிதெரிவிக்கப்பட்டது. கைதிகளிடம் நட்பாக பழகி வரும் சிறை வார்டன்கள் மூலம்பேச்சுவார்த்தை நடந்தது. இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் கலவரம் வரலாம்என்பதால் முன்னேற்பாடாக சிறையில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X