தடா கைதிகள்: சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடிவு
பெங்களூர்:
வீரப்பன் விடுவிக்கக் கோரும் தடா கைதிகள் குறித்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் படிஐகோர்ட்டை வலியுறுத்துவது என்று கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நடிகர் ராஜ்குமார் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக வெள்ளிக்கிழமை பெங்களூரில் முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தடா வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, நெடுமாறன் காட்டுக்குச் செல்ல மறுத்ததுபோன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கர்நாடக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அனைத்துக்கட்சிக் கூட்டம் முடிந்ததும் காவல்துறை அமைச்சர் கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:
ராஜ்குமார் விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ராஜ்குமார் மீட்புப் பிரச்சனையில்அடுத்த கட்ட முடிவு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டது.
வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நிலையே தொடரும் என்றும், ராஜ்குமார் விரைவில் விடுதலை அடைவார் என்றுநம்புவதால் அதையே கடைபிடிப்பது என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு வெடுக்கப்பட்டது. ராஜ்குமார்உடல்நிலை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அவர் நலமுடன் இருக்கிறார்.
மைசூர் தடா கைதிகள் வழக்கை விரைவாக முடிக்க தனிக்கோர்ட்டு அமைக்க, ஐகோர்ட் தலைமை நீதிபதியைகோருவது என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அமைச்சர்கள் சந்திரே கவுடா, தரம்சிங், கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications