திமிங்கலத்தைக் காக்க வந்தது கடற்படை
நாகப்பட்டனம்:
நாகப்பட்டனம் மாவட்டம் பச்சைக்காடு பகுதியில் கடலோர புதைகுழியில் மூழ்கிய 40 அடி நீளமுள்ள திமிங்கலத்தைத் தேடும் முயற்சியில் கடற்படையில்தீவிரமாக இறங்கியுள்ளனர்.
வேதாரண்யத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பச்சைக்காடு. இங்குள்ள கடலில் கடந்த அக்டோபர் 5 ம் தேதி பெண் திமிங்கலம் கரைஒதுங்கியது. ஆழம் குறைந்த பகுதிக்கு அது வந்ததால் அங்குள்ள புதைகுழியில் அது சிக்கிக் கொண்டது.
கோடியக்கரை பகுதியிலுள்ள கடலில் மத்தி என்ற ஒருவகை மீன்கள் அதிக அளவில் காணப்படும். இந்த மீன் மீது ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்ததிமிங்கலங்களுக்கு கொள்ளைப் பிரியம்.
இந்த மீன்களைப் பிடிப்பதற்காக பாக் ஜலசந்தி கடல் பகுதிக்குள் நுழையும் ஆஸ்திரேலியத் திமிங்கலங்கள், அந்த மீன்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள்வந்ததும், தங்களது வால் பகுதியால் சுழற்றி அடித்து, சிக்கும் மீன்களை அப்படியே விழுங்கி விடும்.
இந்த மீன்கள் மீது கொண்ட மோகத்தால், இப்பகுதியிலுள்ள கடலுக்கு வந்த 2 திமிங்கலங்கள் ஆழம் குறைவு காரணமாக புதைகுழியில் சிக்கிக் கொண்டன.இவற்றில் ஆண் திமிங்கலம் கடந்த 8 ம் தேதி இறந்தது. அதை நாகை மாவட்ட நிர்வாகம் இயந்திரம் மூலம் அகற்றி அடக்கம் செய்தனர்.
ஆனால் பெண் திமிங்கலம், கடலுக்குள் செல்ல முடியாமல் கடந்த 46 நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. திமிங்கலத்தைக் காப்பாற்ற நாகைகலெக்டர் சிவ்தாஸ் மீனா தீவிர முயற்சிகள் மேற் கொண்டார். அரசுக்கு அவர் அனுப்பிய அறிக்கையின் பேரில் கப்பல் படை கப்பல் மூலமாகதிமிங்கலத்தைக் காப்பாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கப்பல் கோடியக்கரை வந்தது. அந்தக் கப்பலால் திமிங்கலம் அருகே செல்ல முடியவில்லை.
இதனால் வேறொரு நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட படகு மூலம் திமிங்கலத்தைக் கட்டி இழுத்து வந்து, பின்னர் கப்பலில் அதைக் கட்டி இழுத்துச் சென்றுஆழ்கடலில் கொண்டு விடும் பணி செவ்வாய்க்கிழமை நடக்கிறது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜேந்திரன், நாகை மாவட்ட கடல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சித்திரவேலு மற்றும் அரசு அதிகாரிகள்திமிங்கலத்தை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரையில் ஒதுங்கி உயிருக்குப் போராடி வரும் திமிங்கலத்தை பல ஊர்களில் இருந்து பொதுமக்கள்படகுகளில் வந்து பார்த்து செல்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications