For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

25-ம் தேதி கலைமாமணி விருது விழா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கும் கலைமாமணி விருது வழங்கும்நிகழ்ச்சி 25-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைத்துறிையில் சிறந்த சேவை புரிந்தகலைஞர்களைச் சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலானகலைமாமணி விருதினை வழங்கி வருகிறது.

இவ் விழா 25ம் தேதி சனிக்கிழமை 4.30 மணியளவில் சென்னை கலைவாணர்அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவில் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருது வழங்கி தலைமை உரையாற்றுகிறார்.

தமிழக முதல்வர் கருணாநிதி மறைந்த கலை மேதைகளின் படங்களை திறந்து வைத்துவிருது பெற்ற கலைஞர்களுக்கு பொற்பதக்கம் வழங்கி, கலைமாமணி விருது பெற்று,முதிர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு பொற்கிழியும், சிறந்த நாடகக் குழுவிற்கு சுழற்கேடயமும், சிறந்த கலை நிறுவனங்களுக்குக் கேடயமும் வழங்கி விழாவில்உரையாற்றுகிறார்.

தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் பொன்னாடை அணிவித்து சிறப்புரையாற்றுகிறார்.

தமிழ் வளர்ச்சி - பண்பாடு மற்றும் அறநிலையத் துறைச் செயலாளர் ராமகிருஷ்ணன்ஐ.ஏ.எஸ். அவர்களும், கலை பண்பாட்டு இயக்ககச் சிறப்பு ஆணையர் சீனிவாசன்ஐ.ஏ.எஸ். அவர்களும் விருது பெறும் கலைஞர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கஇருக்கிறார்கள்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் இராம. நாராயணன், உறுப்பினர்-செயலாளர் சொர்ணம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை விரிவான முறையில் செய்துவருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X