For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் கமப்யூட்டர் திருவிழா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரையில் டிசம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் கணிப்பொறித் திருவிழாநடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்.

கணினித் தமிழ் சங்கம் சார்பில், மதுரையில் கணினித் தமிழ் 2001 என்ற கணிப்பொறிசம்பந்தமான கண்காட்சியையும் கருத்தரங்கையும் நடத்தவுள்ளது. இது தொடர்பாககணினித்தமிழ் சங்கத்தின் செயலாளர் ஆண்டோ பீட்டர் அளித்த பேட்டி:

கணிப்பொறியில் தமிழ் வளர்க்கும் நோக்கத்தோடு இயங்கும் நிறுவனங்களின்கூட்டமைப்பே கணினித்தமிழ் சங்கம். கணினியின் முக்கியத்துவத்தை மூலைமுடுக்கெல்லாம் பரப்புவதே இதன் நோக்கம்.

மதுரையில் நடைபெறவுள்ள கணினித்தமிழ் 2001 மூலம் மின் அரசாண்மை, மின்கல்வி, மின் வணிகம், மின் தொடர்பு ஆகியவற்றின் முழு பலனையும் மக்களுக்குஎடுத்துச் சொல்வது எங்களின் நோக்கம்.

இவ்விழாவிற்கு தமிழ் - தமிழர் - கணிப்பொறி என்பதை முழக்கமாகவைத்துள்ளோம். மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கைஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 4 லட்சம் பேர் இந்த விழாவைபார்வையிடுகின்றனர்.

விழாவை டிசம்பர் 23ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கிவைக்கிறார். சபாநாயகர்பழனிவேல்ராஜன், அமைச்சர் தமிழ்க்குடிமகன், தகவல் தொழில் நுட்ப துறைஆலோசகர் அனந்தகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்துகொள்கின்றனர் என்றார் பீட்டர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X