3 மத்திய அமைச்சர்கள் பதவி விலக தேசிய லீக் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய 3 அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று இந்திய தேசிய லீக் தலைவர் லத்தீப் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ம் தேதி அறவழியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும். சென்னை கடற்கரை சாலை, கலெக்டர்அலுவலகம், எதிரே நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நான் தலைமை தாங்குவேன்.

தேசிய லீக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், இஸ்லாமிய தமிழர் பேரவை அமைப்பினர் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த ஆண்டு புனிதமான ரம்ஜான் மாதத்திலேயே மசூதி இடிக்கப்பட்ட தினம் வருகிறது. எனவே உண்ணாவிரதம் இருக்கவில்லை.

மசூதி இடிப்புச் சம்பவத்திற்குக் காரணமான அமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரை உடனடியாக மத்தியஅமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு பிரதமர் வாஜ்பாய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் லத்தீப்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+