For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலத்தில் தங்கப்புதையல்: கிராமமே பரபரப்பு

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் அருகே உள்ள கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டில் தங்க புதையல் கிடைத்ததாக வெளியான தகவலைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் சிவதாபுரம் அருகே உள்ளது வேடகத்தாம்பட்டி கிராமம். வெள்ளி பட்டறைகள் நிறைந்த இந்த கிராமத்திற்குஅருகே கருப்பனூர் என்ற குக்கிராமமும் இருக்கிறது.

இந்த இரு கிராமங்களுக்கும் இடையே வேலு (38) என்ற கொத்தனார் வசித்து வருகிறார்.

இவரது தோட்டம் ஆடி அமாவாசையன்று தோண்டப்பட்டபோது 3 அண்ாடக்களில் தங்க நாணயங்கள் அடங்கியபுதையல் கிடைத்ததாக அந்த கிராமம் முழுவதும் தகவல் பரவியது.

இது குறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:

வேலுவின் வீட்டிலுள்ள தோட்டத்தில் குழி தோண்டப்பட்ட போது பழங்கால தங்க நாணயங்கள் அடங்கியபுதையல் கிடைத்தது. இந்த புதையலை ஊரில் இருக்கும் பூசாரியின் உதவியுடன் சாமி கும்பிட்ட பின் எடுத்தனர்.

இந்த புதையலை வேலுவின் தாயார் பழனியம்மாள் (52). தனது தம்பி ராஜுவின் முயற்சியுடன் தங்கநாணயங்களை அவர் விற்க முயன்றார்.

நாணயங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்கள் பயந்து கிராமத்தில் வசிக்கும் பிறஉறவினர்களையும் அழைத்து அவர்களிடம் அதை விற்று காசாக்க முயன்றனர்.

சேலத்தில் இருக்கும் நகைக் கடைக்காரர் மூலம் தங்க நாணயங்களுக்கு பல கோடி ரூபாய் விலை பேசப்பட்டது.

ஆனால் அதிக விலை பெற ஆசைப்பட்ட வேலுவின் குடும்பத்தினர் நாணயங்களை வேறு கடைக்காரரிடம் விற்கமுயன்றனர்.

இதனால் கோபமடைந்த முதல் கடைக்காரர் சூலமங்கலம் போலீசாரிடம் வேலுவுக்கு புதையல் கிடைத்த விவரத்தைதெரிவித்தார்.

தங்க நாணயங்களை விற்க முயற்சிக்கப்பட்டவர்களிடம் அவை காட்டப்பட்டன. அந்த நாணயங்களில் நவாப்ராஜாபடம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயங்கள் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயங்களாக இருக்கும் எனவும் நாணயத்தை பார்த்தவர்கள்சொன்னதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.

சூலமங்கலம் போலீசார் வேலுவின் வீட்டிற்கு அவரையும் அவரது உறவினரையும் விசாரித்தனர். தங்க நாணயத்தைபார்த்ததாக கூறப்படுபவர்களையும் விசாரித்தனர். விசாரணையின் போது பல தகவல்கள் கிடைத்தது.

போலீசார் இவர்கள் இரு தினங்களுக்கு முன் வேலுவின் வீட்டிற்கு வந்து தோட்டத்தில் முன் தோண்டப்பட்டஇடத்தை மேலும் தோண்டினர். மேலும் வேலுவின் வீட்டிற்கு அருகே ஷெட் உள்ளது அதுவும் தோண்டப்பட்டது.

போலீசார் இதுவரை பொது மக்களிடம் எந்த தகவலையும் கூறவில்லை. போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் இதுபற்றி தெரிவிக்கப்படாததால் மக்களுக்கு போலீசார் மேல் சந்தேகம் வந்துள்ளது.

இதனால் இந்த கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களிலும் புதையல் பற்றியே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புதையலுமில்லை ஒன்றுமில்லை:

இந்நிலையில் புதையல் கிடைத்தவராக கூறப்படும் வேலு தனக்கு புதையல் எதுவும் கிடைக்கவில்லை எனகூறியிருக்கிறார். அவர் கூறியதாவது:

நான் ஏழை. நான் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் என் பெரியப்பா மகன்களுக்கும்தாத்தாவின் சொத்தை பிரிப்பதல் தகராறு ஏற்பட்டது. என் தாத்தாவை நான் தான் கவனித்து வந்தேன். அவரும்சென்ற மாதம்தான் இறந்தார்.

மீண்டும் என்னுடன் உறவு கொள்ள வந்த என் பெரியப்பா மகன்களை நான் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

இதனால் அவர்கள் கிளப்பி விட்ட வதந்திதான் புதையல் கிடைத்தது என்பது. நான் தினமும் வேலை செய்துசம்பாதித்தால் தான் சாப்பாடு கிடைக்கும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X