For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

24.குதிரைகள் சாவுக்கு விஷப் புல் தான் காரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் கடந்த மூன்று நாட்களில் தொடர்ச்சியாக 24 குதிரைகள் தீடீரென்று விழுந்து இறந்தற்கான மர்ம முடிச்சு நடந்து முடிந்த பரிசோதனையில்வெளியாகியுள்ளது.

தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் சாக்கடை நிறைந்த பகுதிகளில் செழிப்பாக விளைந்த புல்களை கொடுத்ததால், அதில் உள்ள நைட்ரேட் எனும் விஷம்வாய்ந்த உப்பு, 24 குதிரைகளையும் பலி வாங்கியதாக பரிசோதனை முடிவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம், வேப்பேரியில் உள்ள தேசிய மாணவர் படை, கிண்டி கிங் இன்ஸ்டியூட் ஆகிய மூன்றுஇடங்களிலும் குதிரைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், அதிகாரிகள் பயிற்சி பெறுவதற்காக குதிரைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

வாட்டசாட்டமாக உள்ள இந்தக் குதிரைகளை, உயரம் தாண்டுதல், வேகமாக சவாரி செய்தல் போன்ற பயிற்சிகளுக்காக ராணுவ அதிகாரிகள்பயன்படுத்தி வந்தனர். இதே போன்று கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் மருத்துவ ஆராச்சிக்காக குதிரைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தேசிய மாணவர் படையிலும் குதிரைகள் உள்ளன. இந்த மூன்று இடங்களில் உள்ள குதிரைகளுக்கும் கடந்த மாதம் 27-ம் தேதி திடீரென்று உடல் நிலைபாதிப்பு ஏற்பட்டது.

வழக்கமாக கொடுக்கப்படும் புல், கொள் மற்றும் இதர உணவு வகைகளை சாப்பிட மறுத்துவிட்டன. மேலும் சிறுநீர் கழிக்கவில்லை. சாணம்போடவில்லை. இதனால் பயந்து போன அதிகாரிகள் உடனடியாக வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவகல்லூரிக்கு குதிரைகளை ஏற்றிச்செல்லஏற்பாடு செய்தனர்.

ஆனால் அதற்குள் ராணுவ முகாமில் நான்கு குதிரைகளும், கிங் இன்ஸ்டியூட்டில் நான்கு குதிரைகளும் துடிதுடித்து கீழே விழுந்து இறந்தன

இதையடுத்து ராணுவ பயிற்சி முகாமில் இருந்து 12 குதிரைகளும் என்.சி.சியில் இருந்து 13 குதிரைகளும் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்குஏற்றிச்செல்லப்பட்டன. அங்கு சிகிச்சை கொடுத்துக்கொண்டிருக்கும் பொழுது குதிரைகள் இறந்தன.

இறந்த குதிரைகளை பரிசோதித்த டாக்டர்கள் குதிரைக்கு வழங்கப்பட்ட புல்லில் விஷம் கலந்திருப்பது தான் காரணம் என்றனர். பல ஆண்டுகளாக,குதிரைக்கு ஒரு காண்டிராக்டர் தான் புல் சப்ளை செய்து வருகிறார்.

கொடுங்கையூர் தொழிற்சாலை கழிவு நீர் மற்றும் சாக்கடை கால்வாயில் விளையும் புல் குதிரைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த புல்லில் நைட்ரேட் என்னும் விஷ உப்பு கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது வரை 24 குதிரைகள் பலியாகியுள்ளன. இன்னும் 12 குதிரைகள்அபாயகட்டத்தில் உயிரை பிடித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த குதிரைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்து போன குதிரைகள் ஒவ்வொன்றும் மிக உயர்ந்த தரமிக்கவை. ஒவ்வொன்றும்மூன்று லட்சரூபாய் மதிப்புள்ளவை.

வியாழக்கிழமையன்று கால்நடைத்துறை அமைச்சர் செங்கூட்டுவன் குதிரைகளை பார்வையிட்டு பின் நிருபர்களை சந்தித்தார்.

பல ஆண்டுகளாக கொடுங்கையூர் தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் சாக்கடை கால்வாயில் விளையும் புல்களைத்தான் இந்த குதிரைகளுக்கு காண்டராக்டர்சப்ளை செய்துள்ளார்.

சுகாதாரமற்ற புல்லில் இருந்த நைட்ரேட் என்ற விஷம் தான் குதிரைகள் இறப்புக்கு காரணமாகியிருக்கிறது. இன்னும் இரு தினங்களில் சரியானகாரணம். அதன் பிறகு காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து விசாரிப்பதற்கு தனி கமிட்டி ஒன்றும் அமைக்கப்படும் என்றார்அமைச்சர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X