For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேங்காய் கொள்முதல் ஊழலில் எனக்குத் தொடர்பில்லை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கொப்பரைத் தேங்காய் கொள்முதல் விஷயத்தில் என் மீது வழக்குப் போட்டால் அதை நீதிமன்றத்தில் சந்திக்கத்தயார், என்று அமைச்சர் நேரு கூறியுள்ளார்.

இது குறித்து உணவுத் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா தன்னைப் போலவே பிறரையும் கருதிக் கொண்டு, தனது பரிவாரங்களைத் தூண்டி விட்டுஅமைச்சர்கள் மீது ஏதாவது வழக்கு போட்டு, அதை பத்திரிகைகளில் வெளிவரச் செய்து அதன் மூலம் குழம்பியகுட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார்.

தேங்காய் கொப்பரை கொள்முதலில் நான் ஏதோ தவறு செய்து விட்டதைப் போல வழக்குத் தொடுக்க ஏற்பாடுசெய்துள்ளார்.

தேங்காய் கொப்பரை கொள்முதலில் அமைச்சர் என்ற முறையில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தேசியவேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தை கவராகக் கொண்டுகொப்பரைத் தேங்காயை கொள்முதல் செய்கிறது. இதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. இதில், சில சிரமங்கள்இருப்பதாக வந்த புகாரின் பேரில், அரசின் சார்பில் விளக்கம் அளித்து பத்திரிகைகளில் விளம்பரம்வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை ஒரு கிலோ கொப்பரைக்கு 32 ரூபாய் 50 காசு. தென்னை விவசாயிகள்நேரடியாக கொள்முதல் மையங்களுக்கு கொப்பரைத் தேங்காய்களை கொண்டு வந்து கொடுத்து இந்த விலையைப்பெற்று பயனடையலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்ய மறுத்தால் உடனேகலெக்டர் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதற்கான பணத்தை காசோலை மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்திர விட்டிருப்பதால்,இடைத்தரகர்கள் யாரும் பயனடைய வழியில்லை. ஈரோடு மாவட்ட கலெக்டர், தாராபுரம் விற்பனை சங்கத்தில்கொப்பரை கொள்தலில் தவறு நடந்திருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தார். அதன் பேரில் நடவடிக்கைஎடுக்கப்பட்டது. இதற்கு சி.பி.சி.ஐ.டி விசாரணை தேவையில்லை என்று கூடுதல் பதிவாளர் கருத்து தெரிவித்தார்.

ஆனால், முதல்வர் கருணாநிதி இறுதி விசாரணை நடத்தி அதன் பரிந்துரையை ஒட்டி இறுதி முடிவெடுக்கலாம்என்று உத்திர விட்டார். எனவே, அரசுக்கோ எனக்கோ இந்த விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை. தாராபுரம்,உடுமலைப்பேட்டை சங்கங்கள் மட்டுமின்றி கொள்முதல் உள்ள அனைத்து இடங்களிலும் விசாரணை நடத்தஉத்திர விடப்பட்டது.

அ.தி.மு.கவைச் சேர்ந்த காங்கேயம் வட்டத் தலைவர் சின்னசாமி மற்றும் சிலர், கிராம நிர்வாக அதிகாரிகளைப்போல் கையெழுத்திட்டு போலி முத்திரையை பயன்படுத்தி இருக்கிறார்கள். போலி ஆவணங்கள்கைப்பற்றப்பட்டன என்று கலெக்டர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

எனவே, தேங்காய் கொப்பரை கொள்முதலில் தவறு செய்தவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அரசின் மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை. தென்னை விவசாயிகளுக்கு நன்மை செய்யமூத்த அதிகாரிகள் கேரளா சென்றனர்.

அங்கு என்ன வழிமுறை பின்பற்றப்படுகிறது என்று அறிந்து வர நடவடிக்கை எடுத்த முதல்வர் கருணாநிதிஒவ்வொரு சிறு விஷயத்திலும் தவறு நடக்காமல் கவனத்துடன் கண்காணித்து வருகிறார்.

எனவே, ஜெயலலிதாவின் தூண்டுதலோடு என்மீது வழக்குத் தொடர முனைந்தால், அதனை நீதிமன்றத்தில்சந்திக்கத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X