குமரியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னியாகுமரியில் அடுத்த கல்வி ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்படும்என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் அரசு மருத்துவக் கல்லூரி துவக்க வேண்டும் என கன்னியாகுமரிமாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர். இதையடுத்து இங்கு அரசுமருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரி அடுத்த கல்வி ஆண்டுமுதல் துவக்கப்படும். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. கல்லூரி முதல்வர் மற்றும் தனி அதிகாரியைநியமிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இன்னும் இரு நாட்களில் தனி அதிகாரிநியமிக்கப்பட இருக்கிறார்.












Click it and Unblock the Notifications