For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நினைத்தது நடக்கவில்லை.. வருந்துகிறார் மூப்பனார்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

நாட்டு மக்களின் நன்மைக்காக தனித்துப் போட்டியிட்டோம். பல தியாகங்களைச்செய்தோம். ஆனால், நினைத்தது நடக்கவில்லை. இதை நினைக்கும்போது மனதுக்குவேதனையாகவும், கஷ்டமாகவும் உள்ளது என்றார் மூப்பனார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

புதிய கூட்டணி பற்றி எதுவும் கூற இயலாது. தேர்தல் வரட்டும் பார்க்கலாம். தற்போதுஎந்த அரசியல் கட்சியும் நிலையில்லாமல் ஆளுக்கு ஒரு பக்கம் போய்க்கொண்டுள்ளனர். இந்த நிலை தெளிவடைந்த பின்னர் கூட்டணி பற்றி பார்க்கலாம்.

சென்றமுறையே ஜெயிப்போம் என்று நினைத்துத் தான் தனித்துப் போட்டியிட்டோம்.ஆனால் மக்கள் ஆதரவு இல்லையே? தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமையும்என்பது உறுதி. அதற்கான காலம் கூடி வரும். தேவையான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம்.

தமிழகத்தில் த.மா.கா நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. தொகுதி வாரியாகச் சென்றுமக்களைச் சந்தித்து வருகிறோம். மதச்சார்பற்ற அணிகள் ஒன்றாக இருக்கிறோம்.தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்வோம்.

அயோத்தி பிரச்னை குறித்து பிரதமர் கூறிய கருத்துக்கள் தவறுதான், கூட்டணிக்கட்சிகள் கூட அவரது கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதியும்கூட ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் தைரியமாக தப்பு என்றும்சொல்லவில்லை. பிரதமர் கரு த்தை எப்படி நியாயப்படுத்த டியும்.

பாபர் மசூதி இடிக்கும் போது மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தாலும்,மாநிலத்தில் பா.ஜ ஆட்சி தான் இருந்தது. இதனால் மாநில அரசு மசூதியை இடிக்கமாட்டோம் எனக் கூறியிருந்தது. ஆனால், காங்கிரஸ், பா.ஜ அரசு மீது வைத்திருந்தநம்பிக்கை தவறாகி விட்டது.

வீரப்பன் பிரச்னையில் அரசு வீரப்பனுக்கு சாதகமாக இருந்தது என்பதை விடமெத்தனமாக இருந்தது தான் உண்மை. இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். வீரப்பனுடன் தீவிரவாத அமைப்புகள் இருந்து வருகின்றன. இவர்களைஇப்படியே விட்டு விட்டால் நாட்டுக்கு ஆபத்து.

ஜெயலலிதா பேச்சைக் கேட்டு பிரதமர் கலைக்கவில்லை. எனவே நன்றிக் கடனுக்குதி.மு.க., பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால், அவர்களின் உறவுதொடர்ந்தது. எனவே, தி.மு.க.,வுடன் உறவைமுறித்துக் கொண்டோம்.

பின்னர் நாட்டு மக்களின் நன்மைக்காக தனித்துப் போட்டியிட்டோம். பலதியாகங்களைச் செய்தோம். ஆனால், நினைத்தது நிடக்கவில்லை. இதைநினைக்கும்போது மனதுக்கு வேதனையாகவும் கஷ்டமாகவும் உள்ளது என்றார்மூப்பனார்.

தி.மு.க.,வுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதா என நிருபர்கள் கேட்டபோது,அத்தைக்கு மீசை ளைத்தால் பார்க்கலாம் என்றார். மேலும், தமிழ்நாடு நிலவரம் எப்படிஉள்ளது என்ற கேள்விக்கு சூரிய வெளிச்சம் மிகவும் கடுமையாக இருக்கிறது என்றார்மூப்பனார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X