For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை வக்கீலுக்கு 6 மாத சிறை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த்திற்கு மிரட்டல் தந்தி அனுப்பியசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சுந்தரத்திற்கு, உச்சநீதிமன்றம் 6 மாதசிறைத் தண்டனை விதித்துள்ளது.

நீதிபதிகள் கே.டி.தாமஸ் மற்றும் ஆர்.பி.சேத்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தஉத்தரவைப் பிறப்பித்தது. சுந்தரத்தின் செயல் அப்பட்டமான கிரிமினல் நடவடிக்கைஎன்று அவர்கள் தங்களது உத்தரவில் கூறினர்.

கடந்த மாதம் 3-ம் தேதி தலைமைநீதிபதி ஏ.எஸ்.ஆனந்த்திற்கு, சுந்தரம் அனுப்பியதந்தியில், போலியான வயதைக் காட்டி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகி விட்டார் என்பதுஉள்ளிட்ட பல குற்றங்களை சுமத்தியிருந்தார். இதை நீதிமன்ற அவமதிப்பாக தற்போதுசுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

பெஞ்ச் சார்பில் தீர்ப்பை அறிவித்த நீதிபதி கே.டி.தாமஸ் கூறியதாவது:

சுந்தரம் இதய நோயாளி என்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை 1 மாதத்திற்குநிறுத்தி வைக்கப்படுகிறது.

இதுபோன்ற செயலில் எதிர்காலத்தில் ஈடுபட மாட்டேன் என்று சுந்தரம் உறுதியளிக்கவேண்டும். அப்படிச் செய்தால், தண்டனையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க நீதிமன்றம் முடிவு செய்யும்.

இருப்பினும், இந்த ஐந்து ஆண்டு காலத்தில் வேறு ஏதாவது குற்ற நடவடிக்கையில்ஈடுபட்டால், சஸ்பெண்ட் உத்தரவு நீக்கப்பட்டு தண்டனை அமலாக்கப்படும்.

தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த்தின் உண்மையான வயது வக்கீல் சுந்தரத்திற்குத்தெரியும். இருந்தும் கூட, அவதூறான நோக்கத்துடன், நீதிபதி ஆனந்த் பிறந்த ஆண்டு1934 என்று கூறியுள்ளார். இது ஆனந்த்தை, தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டகுடியரசுத் தலைவர், அவரது நியமன உத்தரவைப் படித்து சரி பார்த்த சொலிசிட்டர்ஜெனரல் ஆகியோரை சுந்தரம் அவமதித்து விட்டார்.

1991-ம் ஆண்டு அப்போதைய தலைமைநீதிபதியிடம் குடியரசுத் தலைவர்ஆலோசனை நடத்தினார். அப்போது, ஆனந்த்தின் பிறந்த வயது 1936, நவம்பர் 1என்று தெரிந்து கொண்ட பிறகே நியமன உத்தரவைப் பிறப்பித்தார். குடியரசுத் தலைவர்முடிவு செய்த பிறகு அதை கேள்வி கேட்கும் உரிமை வக்கீல் சுந்தரத்திற்குக் கிடையாது.

வெறும் தந்தி அனுப்பியதன் மூலம் மட்டும் வக்கீல் சுந்தரம் நின்றிருந்தால் நாங்கள்அதைப் பெரிதுபடுத்தியிருக்க மாட்டோம். ஆனால் இதே நீதிமன்றத்திலேயே கிரிமினல்புகாரும் கொடுத்துள்ளார் சுந்தரம். எனவே திட்டமிட்ட அவதூறாகவே இதை எடுத்துக்கொள்கிறோம். இது சுப்ரீம் கோர்ட்டின் புனிதத்தை அவமதிப்பதாகும்.

சுந்தரம் அனுப்பிய தந்தி நான்கு அவதூறான அம்சங்களைக் கொண்டுள்ளது. நீதிபதிஆனந்த் பதவியிலிருந்து விலக வேண்டும் எனறு சுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்,நீதிபதி ஆனந்த்தை குற்றவாளியாகவும் சுந்தரம் சித்தரித்துள்ளார், தலைமை நீதிபதி ஒருஉத்தரவைப் பிறப்பிப்பதற்காக அவருக்கு ரூ. 3 கோடி கொடுப்பேன் என்பதுமூன்றாவது அவதூறு. நான்காவதாக, தலைமை நீதிபதி பதவிக்கு லாயக்கில்லாதவர்ஆனந்த் என்று கூறியுள்ளார் சுந்தரம்.

இந்த நான்கு புகார்களும் சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல்களாக கருதுகிறோம்என்று உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X