வாஷிங்டன் வந்தார் புஷ்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஜூனியர்ஞாயிற்றுக்கிழமை இரவு டெக்சாஸ் தலைநகர் ஆஸ்டினிலிருந்து வாஷிங்டன் வந்துசேர்ந்தார்.
வாஷிங்டனில் அதிபர் பில் கிளிண்டனையும், துணை அதிபரும் இவரை எதிர்த்துஅதிபர் தேர்தலில் போட்டியிட்டவருமான அல் கோரையும தனித்தனியே சந்தித்துபேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.
வாஷிங்டன் கிளம்பும் முன் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தகோன்டோலீசா ரைஸை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக புஷ் நியமித்தார். ரைஸ்,ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பர் ஆவார். முன்னதாக சனிக்கிழமை ஜெனரல் காலின்பாவல் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் கருப்பர் இனத்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.
புளோரிடாவில் புஷ்ஷுக்கு ஆதரவாக விழுந்த வாக்குகளில் 40 சதவீத வாக்குகள்கருப்பர் இனத்தவர்களின் வாக்கு என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவற்றில்பெரும்பாலான வாக்குகள் எண்ணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பாவல், ரைஸ் தவிர, தனது அபிமானிகளான டெக்சாசை சேர்ந்த இருவரை வெள்ளைமாளிகையின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்க இருக்கிறார் புஷ்.
டெக்சாஸ் நீதிபதி, அல்பெர்டோ கான்ஜேல்ஸ் வெள்ளைமாளிகை ஆலோசகராகநியமிக்கப்படவுள்ளார். காரேன் ஹியூக்ஸ் என்பவரும் வெள்ளை மாளிகைஆலோசகராக நியமிக்கப்பட உள்ளார்.
சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த இரண்டு கருப்பர் இன பெண்களையும், ஒரு ஆசியஇனத்தவரையும் அமைச்சரவையில் சேர்க்க புஷ் முடிவு செய்துள்ளார்.
முன்னதாக, வாஷிங்டன் விமான நிலையத்தில் புஷ் பேசுகையில், கடுமையாகஉழைப்பவர்களும், சரியான முடிவு எடுப்பவர்களும் தாங்கள் நினைத்ததை வெள்ளைமாளிகையில் சாதிக்க முடியும்.
ரைஸிற்கு காபினட் அந்தஸ்து இல்லாவிட்டாலும் அவர் அனைத்து காபினெட்கூட்டங்களுக்கும் வரவேண்டும் என நான் விரும்புகிறேன். அவருடன் நான் தினமும்ஆலோசனை நடத்துவேன் என்றார்.
46 வயதான ரைஸ் புஷ்ஷின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அயல்நாட்டு விஷயங்கள்குறித்த ஆலோசகராக செயலாற்றினார். ரைஸ் புத்திசாலி மட்டுமல்ல. அதிக அனுபவம்மிக்கவர். அவரது முடிவுகளை நான் மதிக்கிறேன் என புஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதற்கிடையே, பதவி விலகிச் செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர் மேடலின்அல்பிரைட்டை புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் சந்கித்துப்பேசினார்.
இந்த பேச்சு வார்த்தை குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த பேச்சு வார்த்தைமிகவும் சுமுகமாக இருந்தது.மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இனி வரவிருக்கும்காலங்களிலும் இருவரும் இது போன்று சந்தித்து பேசுவதென முடிவு செய்துள்ளனர்என்றனர்.
இதனிடையே அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "டைம் பத்திரிக்கை, புதிய அதிபர்புஷ்ஷை இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications