For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரியங்காவுக்கு உற்சாக வரவேற்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:Priyanka Chopraஅன்னை தெரசா உதவியால் உலக அழகியான பிரியங்கா சோப்ராவுக்கு டெல்லியில்பத்திரிகையாளர்களின் கேள்வி அம்புகள் உற்சாக வரவேற்பு கொடுத்தன.

18 வயதாகும் இந்திய அழகி, பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் லண்டனில் நடந்த மிஸ்வேர்ல்ட் போட்டியில் வெற்றி பெற்று உலக அழகியானார். இந்தப் போட்டி முடிவுபலவிதமான சர்ச்சைகளைக் கிளப்பியபோதிலும், இந்தியவிலிருந்து இன்னொரு உலகஅழகி வந்ததை இந்தியர்கள் வரவேற்கவே செய்தனர்.

போட்டி முடிந்த பிறகு முதல் முறையாக திங்கள்கிழமை டெல்லிக்கு வந்தார் பிரியங்காசோப்ரா. அவருக்கு வரவேற்புடன், செய்தியாளர்களின் பரபரப்பான விசாரிப்புகளும்காத்திருந்தது.

பேட்டி நடந்த அரங்கில் செய்தியாளர்கள் கூட்டம் அலைமோதியது. பட்டம் வாங்கித்தந்த கேள்விக்கு பிரியங்கா அளித்த பதில் அன்னை தெரசா. உயிருடன்இருப்பவர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார் என்ற கேள்விக்குத்தான் இந்தப் பதில்.தெரசா உயிருடன் இல்லை என்பதை மறந்து விடுவோம். உலக அழகியின்பதிலாயிற்றே! மறுக்க முடியுமா?.

இது மட்டுமா குழப்பம்?. இந்திய மக்கள் தொகையை 2 மில்லியனாக (200 கோடி)கூறினார் பிரியங்கா. உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு அவர் கூறி விட்டதாக, பேட்டிக்குஏற்பாடு செய்திருந்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் திலீப்பட்கோவன்கர் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். சரி, இதையும் விட்டுவிடுவோம்!.

செய்தியாளர்களின் கேள்வி அம்புகளை அழகாக சமாளித்தார் பிரியங்கா. ஒருசெய்தியாளர், உண்மையான இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை தெரியுமா என்றுபிரியங்காவை நோக்கிக் கேட்டார் (ஜெனரல் நாலேட்ஜ் கேள்வி). அதற்கு சிரித்தவாறே,தெரியும், 100 கோடி என்றார் பிரியங்கா. கேட்டவர் முகத்தில் எதிர்பார்த்ததுகிடைக்காமல் போன அதிருப்தி.

மெரூன் கலர் சேலையில் அழகு தேவதையாக வந்த பிரியங்கா, கேள்விகளுக்கஅனாயசமாக பதில் சொன்னார். பிரச்சினைக்குரிய கேள்விகளுக்கு பதில் சொல்வதைத்தவிர்த்தார்.

உ.பி. மாநிலத்தில் (பிரியங்காவின் சொந்த மாநிலம்) அழகிப் போட்டிகள் நடத்தக்கூடாது என்று அந்த மாநில முதல்வர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளது குறித்துபிரியங்காவிடம் கேட்டபோது, இப்போதுதான் இந்தியாவுக்கு வந்துள்ளேன். என்னநடந்தது என்று தெரியவில்லை. தனது முடிவை முதல்வர் ராஜ்நாத் சிங் மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறேன் என்றார்.

உலக அழகியாக தேர்வானதில் பெருமையா என்ற கேள்விக்கு, நான் உலக அழகியாகஆனாலும் கூட பரேலியின் (சொந்த ஊர்) மகள் என்பதில்தான் எனக்கு முதல் பெருமை(அட!) என்றார் பிரியங்கா.

மில்லனியத்தின் முதல் மிஸ் வேர்ல்ட் என்ற பெருமையைப் பெற்றுள்ள பிரியங்கா,சைக்காலஜி படிக்கிறார். சினிமாவில் நடிப்பேன் என்கிறார். அப்பா, அம்மா பார்க்கும்பையனையே திருமணம் செய்து கொள்வேன் என்றும் (நாணத்துடன்) கூறுகிறார்.

பிரியங்காவுடன், மிஸ் வேர்ல்ட் போட்டிகளை நடத்தும் நிறுவனத்தின் தலைவர்ஜூலியா மோர்லியும் வந்திருந்தார் ( ஒரு வருடத்திற்கு இவரது கட்டுப்பாட்டில்தான்பிரியங்கா இருப்பார்). உலக அழகிப் போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களைஅவர் செய்தியாளர்களுக்கப் பட்டியலிட்டார். ஏன் அழகிப் போட்டிகளைநடத்துவதற்கு இத்தனை தடைகள் என்று அவர் கேட்டார். இந்திய அழகிகள் சர்வதேசபோட்டிகளில் வெற்றி பெறுவதில் எந்தக் குழப்பமும் இல்லை என்றார் அவர். (இந்தஆண்டு மட்டும் சர்வதேச அளவில் நடந்த மூன்று போட்டிகளிலும் இந்தியஅழகிகள்தான் வென்றுள்ளனர்.)

சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம ஊர் பொண்ணு, உலக அழகியானதில் எந்தஇந்தியருக்குத்தான் பெருமை இருக்காது?.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X