For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன செய்கிறது அதிரடிப்படை .. கேட்கிறார் நெடுமாறன்

By Staff
Google Oneindia Tamil News

நாமக்கல்:

வீரப்பனைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை வீரர்களின்நடவடிக்கை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உண்மையிலேயேவீரப்பனைத் தேடுகிறார்களா என்று கேட்டுள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ. நெடுமாறன்.

நாமக்கல்லில் நெடுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அதிரடிப்படையினர் மலைவாழ் மக்களைக் கொடுமைப் படுத்திய சம்பவம்தொடர்பாக சதாசிவம் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்கமிஷன் தனது விசாரணையைத் துவக்கும் முன்பே கர்நாடக அதிரடிப்படை மற்றும்அதிகாரிகள், கமிஷனை எதிர்த்து நீதிமன்றத்தில் தடை பெற்றனர். இதனால் அந்தவிசாரணை தடைபட்டுப் போனது.

சதாசிவம் கமிஷன் விசாரணையைத் துவக்கினால் பல்வேறு உண்மைகள் வெளிவரும்எனவே, இந்த தடையை நீக்கி விசாரணையை விரைவில் துவக்க வேண்டும்.

இரு மாநில அரசுகளின் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்குஉரிய நிவராணம் வழங்க வேண்டும். வீரப்பனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட அரசுவிசாரணை செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி விட்டது. ஆனால்,அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கஇன்னும் விசாரணையே துவங்க வில்லை என்பது தான் கவலை அளிக்கக் கூடியதாகஉள்ளது.

அதிரடிப்படையினர் காட்டுக்குள் என்ன நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்என்பது குறித்து ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உண்மையில்தேடுதல் வேட்டையைத் தொடர்கின்றனரா என்பது குறித்தும், அவர்கள்மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்தும் அறிய செய்தியாளர்களைஅதிரடிப்படையினருடன் செல்ல அனுமதிக்க வேண்டும்.

அகண்ட தமிழகம் என்ற வெப்சைட் துவக்கியது தமிழர் இயக்கத்தின் மீது பழிசுமத்தி,களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான். எனவே எங்கள் மீதுபழிசுமத்தும் போக்கினை கை விட வேண்டும்.

வீரப்பன் இலங்கை சென்று விட்டதாகக் கூறுகின்றனர். அவ்வாறு இலங்கைசென்றிருந்தால், கடலோரக் காவல் படையும், இந்திய கடற்படையும், என்ன செய்துகொண்டிருந்தது. அவ்வாறு வீரப்பன் சென்றிருப்பான் என்றால், இந்த படைகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழவேந்தனை தமிழகத்தில் இருந்து வெளியேற்றியது தமிழ் மக்களுக்கு எதிரானநடவடிக்கையாகும். மீண்டும் ஈழ வேந்தனை தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலையைக் கை விட வேண்டும். ராஜிவ்காந்தி ஆட்சியிலிருந்தபோது இருந்த அணுகுமுறையை மாற்றி தமிழர்களின்பிரச்னைக்கு தீர்வு காண அரசு முயல வேண்டும். குறைந்த பட்சம் இந்தியாஆதரவளிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம்ஒப்படைக்க வேண்டும். அவர்களிடம் நிர்வகிக்கும் பொறுப்பை ஓப்படைக்கவேண்டும். அல்லது சர்வதேச அமைப்பிடம் அகதிகள் நிர்வாகத்தை ஒப்படைக்கவேண்டும்.

கள்ளச் சாராயத்தை ஒழிக்க ஆண்களை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்துவதுவெட்கக் கேடான விஷயம். ஆண்கள் உள்ள எத்தனையோ சங்கங்கள்இருந்தபோதிலும், இதில் பெண்களின் பங்கு பாராட்டுக்குரியது என்றார் நெடுமாறன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X