For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனைப் பிடிக்க முடியுமா? நெடுமாறன் விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை:

வீரப்பனைப் பிடிக்க முடியுமா என்பதை அதிரடிப்படையினரிடம்தான் கேட்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் நெல்லையில்தெரிவித்தார்.

நெல்லையில் நெடுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் மனித நேய சுற்றுப்பயணமாக எனது சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறேன்.சந்தன மர வீரப்பனை பிடிக்க நியமிக்கப்பட்ட அதிரடிப்படை அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட மக்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட சதாசிவம் கமிஷன்இன்னம் தனது விசாரணையைமுழுமையாக நிறைவேற்றவில்லை. அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகளே விசாரணைக்கு தடை உத்தரவுவாங்கியுள்ளனர்.

தடையை நீக்கி விசாரணைமுழுமையாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் காலம் வரை அதிரடிப்படை நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும். அதிரடிப்படை நடவடிக்கை தொடர்ந்தால் சதாசிவம் கமிஷன் முன்னால் சாட்சியம் அளிக்க யாரும் முன் வர மாட்டார்கள்.

குற்றச்சாட்டுக்கு ஆளான அதிரடிப்படை அதிகாரிகள் சங்கர் பத்திரி ( கர்நாடகா) மோகன் நவாஸ் ( தமிழ்நாடு ) ஆகியோர் தலைமையில் அதிரடிப்படையினர்வீரப்பனை பிடிக்க காட்டுக்குள் சென்றுள்ளனர். சதாசிவம் விசாரணை கமிஷன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்க மட்டுமே அமைக்கப்பட்டது.

அட்டூழியம் செய்த அதிகாரிகள் பற்றி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு - கர்நாடக அரசுகள் கூட்டாக ஒரு விசாரணை கமிஷன்அமைக்க வேண்டும். குற்றம் செய்த அதிகாரிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

கடந்த 8 ஆண்டு காலத்தில் அதிரடிப்படை நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு 60 கோடி ரூபாயும், கர்நாடக அரசு 110 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது.பணம் முறைப்படி செலவு செய்யப்பட்டு உள்ளதா? என்று தணிக்கை செய்யவில்லை. இந்த பணத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது.

இது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் ஆதரவை திரட்ட மனித நேய பயணத்தை தொடங்கியிருக்கிறேன். செல்லும் இடங்களில் எல்லாம்நல்ல வரவேற்பு உள்ளது. எந்த ஒரு தனி மனிதனையும் பிடிப்பதற்கு இவ்வளவு பணம் வீணடிக்கப்பட்டது இல்லை.

நாங்கள் தீவிரவாதிகள், தமிழ் தேசவாதிகள் எங்களை காட்டுக்குள் அனுப்பக் கூடாது என்று சொன்னார்கள். யாரும் தாமதமாக முன்வந்துகாட்டுக்குள் சென்று வீரப்பனை சந்தித்து பேசி ராஜ்குமாரை மீட்க முன்வரவில்லை. அவர்களது நோக்கம் அதுவல்ல.

ராஜ்குமாரை மீட்பதற்கான முயற்சியை சீர்குலைக்க வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கம். ராஜ்குமார் மீட்கப்படாமல் போனால் இரண்டுமாநிலங்களிலும் ரத்தக்களறி ஏற்படும், நூற்றுக்கணக்கான மக்கள் கலவரங்களில் சிக்கி உயிர் இழப்பார்கள், இதை வைத்து அரசியல் ஆதாயம்தேடலாம் என்று நினைத்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.

ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் மனித நேய உணர்வோடு ஏற்பட்ட முயற்சியால் வெற்றி பெற்றோம். இதனால் இரு மாநிலஅரசுகளுக்கும் இடையே புதிய நல்லுணர்வு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு இரண்டு மாநில மக்களும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அவதூறுபேசுகிறவர்களுக்கு இரு மாநில மக்களும் நல்ல பதில் அளிப்பார்கள்.

வீரப்பனை பிடிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் வீரப்பனை விட அதிகம் குற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்க மறுப்பது ஏன்? அதிரடிப்படையினரால் 90-க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். 60க்கும்மேற்பட்டவர்கள் பாலியல் ரீதியாக மிக கொடுமையான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.? வீரப்பன் வைத்த கோரிக்கைளை நிறைவேற்றி தருவதாக இரு மாநிலஅரசுகளும் அளித்த வாக்குறுதியில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒரு சில பிரச்சனைகளை நிறைவேற்றுவதில் சட்டப் பிரச்சனைகள்உள்ளது.

அனைத்து வாக்குறுதிகளும் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகளை பார்க்க கைதியின்பெற்றோர் மற்றும் வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அரசு ஆணையை ரத்து செய்யவேண்டும். இதை எதிர்த்து அனைத்துகட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என்றார் பழ.நெடுமாறன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X