For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை விழாவைக் கலக்கிய இந்திய யானை

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: புலிகளின் போர் நிறுத்தத்தை, இலங்கை அரசு நிராகரித்தது சரிதானா?

ப: புலிகளின் முந்தைய போர் நிறுத்தங்கள் அப்படிப்பட்டவை. அடுத்த தாக்குதலுக்கு தயார் செய்து கொள்ள அவர்கள் தேடுகிற அவகாசம்தான் - போர்நிறுத்தம் என்கிற அச்சம் இலங்கை அரசுக்கு இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

கே: ஒரு காலத்தில் தங்களால் மிகவும் மரியாதைக்குரியவராக போற்றப்பட்ட முன்னாள் பிரதமர் சந்திரசேகரைப் பற்றி, தங்களின் மதிப்பீடு தற்போதுமாறியுள்ளதா?

ப: இல்லை. இன்னும் அவர் என் மனதில் உயர்ந்துதான் நிற்கிறார். அரசியல் சந்தையில் எழுப்பப்படும் ஓசையில், அவருடைய குரல் அமுங்கிப் போனாலும்,அந்தக் குரலில் பெரும்பாலான நேரங்களில் நியாயமும், நிதானமும் இருக்கின்றன.

கே: பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு தேவை இல்லை. 10 சதவிகிதமே போதுமானது என்று முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளது பற்றி...?

ப: முலாயம் சிங் கட்சியினர் அதிக கூச்சலைக் கிளப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதிலும் 10 மடங்கு அதிகம்.

கே: நீ தாடியில்லாத பெரியார்: பொடியில்லாத அண்ணா! இன்று நீ நல்விருது எனக்கு அளித்தாய்: நான் வாலாட்டும் நாயானேன் - என்று பாரதியார் விருதுபெற்ற கவிஞர் வாலி, முதல்வர் கருணாநிதியை பாராட்டியுள்ளது பற்றி ...?

ப: டாலாக்கு டோல் டப்பி மா என்ற பாடல் வரிகளுக்கு நிகராக வாலி எழுதியுள்ள வரிகள் இவைதான். இதில் சப்தம்தான் முக்கியம்: பொருளைத்தேடக் கூடாது. டாலாக்கு டோல் டப்பி மா!

கே: தேர்தலுக்கு முன்பே தமிழக மக்களைக் குழப்ப ஆரம்பித்து விட்டீர்களே! இது நியாயமா?

ப: திடீர் குழப்பம்தான் உங்களுக்குப் பிடிக்குமா?இது அலோபதி அல்ல - ஓர் ஊசி போட்டு, பிரச்னையைத் தீர்ப்பதற்கு. இது ஆயுர்வேதம் - கொஞ்சம்கொஞ்சமாக எண்ணெய் தடவி, பத்தியம் கூறி ,படிப்படியாக பிரச்னையைத் தீர்க்கும் வழி.

கே: ஸ்டாலின் மகன் மேயரானால் கூட,அதை எவனும் தடுக்க முடியாது என்று அமைச்சர் அன்பழகன் பேசியுள்ளது குறித்து ...?

ப: இது ஜால்ரா இல்லை ... ஜகஜால்ரா!

கே: உங்கள் பெயரை கேள்விப்படும் போதெல்லாம், இதிகாச கால நாரதர் தான் என் மனக்கண்ணில் தோன்றுகிறார். அது ஏன்?

ப: நாரதருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஓஹோ! புரிகிறது. நான் ஒரு சங்கீதப் புலி என்று யாராவது சொல்லியிருப்பார்கள். அதனால் உங்களுக்குஇந்த எண்ணம் வருகிறது. நம்பாதீர்கள்.

கே: இக்கால பெண்களிடம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - ஆகியவை எந்த அளவில் இருக்கிறது?

ப: 33 சதவிகிதம் தேறும்.

கே: கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலே பிரிவினைவாத சக்திகள், பயங்கரவாத சக்திகள் தலை தூக்கி விடுகின்றன என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகூறியிருப்பது குறித்து ...?

ப: இதை முதல்வர் ஓரு பெருமையாக நினைத்துவிடப் போகிறாரே என்று கவலையாக இருக்கிறது..

கே: ஆசியாவிலேயே முதன் முதலாக, உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் பற்றி ...?

ப: மனதுக்கு தெம்பளிக்கிற விஷயம். அவர் பாராட்டுக்கு உரியவர்.

கே: போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்ததை இப்போது நீங்கள் ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.சில வாரங்களுக்கு முன் துக்ளக் கேள்வி -பதிலில் இதை மறுத்துள்ளீர்கள். நீங்களும் பொய் கூற ஆரம்பித்து விட்டீர்களே., ஏன் இந்த மாற்றம் ...?

ப: நான் சொன்னது பொய்யல்ல. முன்பு என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும் இதுதான்:

கே: நீங்கள் ஜெயலலிதாவுக்கு மீண்டும் சட்ட ஆலோசனை கூறுவதாக வந்த செய்தி பற்றி ...?

ப: நம்ப வேண்டாம்.

இதில் பொய் எங்கிருந்து வந்தது? நான் அவருக்கு எந்த ஆலோசனையும் வழங்கவில்லை - என்பது உண்மையே.

கே: இயல்பாகவே பெண்களிடம் எந்த குணம் அதிகமிருக்கும்? ஆண்களிடம் எந்த குணம் அதிகமிருக்கும் ...?

ப: செய்த காரியத்திற்கே கூட நான் பொறுப்பில்லை என்று கூறி தப்பிக்கப் பார்ப்பது பெண்களின் குணம்: செய்யாத காரியத்திற்கும் நானே பொறுப்பு என்றுகூறி, பெருமை தேடுவது ஆண்களின் குணம்.

கே: மூலிகை பெட்ரோல் ரகசியத்தையும், உரிமத்தையும் ஆர்.எஸ். எஸ். அமைப்பிடம் ராமர் பிள்ளை ஒப்படைத்துள்ளது பற்றி ...?

ப: ஆர்.எஸ்.எஸ் ஸின் ராமர் பக்தி, இவ்வளவு தூரத்திற்குப் போக வேண்டாம்.

கே: மறைந்த தலைவர்களின் சிலைக்கு மலர் வளையம் வைத்து கை கூப்பி வணங்கும் அரசியல்வாதிகள், மனதில் என்ன வேண்டிக் கொள்வார்கள் ..?

ப: இது டி.வி.யில் இன்று நல்ல முக்கியத்துவத்துடன் காட்டப்பட்டால், நன்றாக இருக்கும் என்று வேண்டிக் கொள்வார்களோ என்னவோ!

கே: இஃப்தார் விருந்துக்கு தாங்கள் செல்வது இல்லையே, ஏன்?

ப: வேஷம் போட நான் நாடகங்கள் நடத்துகிறேனே? அது போதாதா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X