For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கு பார்த்தாலும் பிரார்த்தனை

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

குஜராத்தில் பூகம்பத்தையடுத்து, அகமதாபாத் நகரிலுள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலத்தில்சகஜ வாழ்க்கை திரும்புவதற்காக கண்ணீருடன் பிராத்தனை செய்கின்றனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர். இங்கு பூகம்பம் ஏற்பட்ட 17மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் மீண்டும், பூகம்பத்தால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்திற்குப்பின் அகமதாபாத்திலுள்ள ஷாகிபாங் காயத்திரி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கானபொதுமக்கள் வந்து பிராத்தனை செய்த வண்ணம் உள்ளனர்.

இதுவரை கோவில் பக்கமே எட்டிப்பார்க்காத மக்கள் கூட பூகம்பம் ஏற்பட்ட பின் தொடர்ந்து கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்கின்றனர் என்றுகாயத்திரி கோவில் முதன்மை பூஜாரி ஜோஷி தெரிவித்தார்.

இயற்கைச்சீற்றம், தீமைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட ஜெயின் மதத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகள் ஏற்றி பூஜை செய்தவண்ணம் உள்ளனர்.

ஜெயின் மதத்தைச் சேர்ந்த மஜூலாபென் ஷா என்ற குடும்பத் தலைவி கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் பூமி மாதாவின் கோபம்தான்.அதற்காக விளக்குகள் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும். நாங்கள் விளக்குகள் வைத்து பூஜைகள் செய்ய ஆரம்பித்தபின் 4.5 ரிக்டர் அளவுக்கு மேல்நிலநடுக்கம் ஏற்படவேயில்லை. எங்களது வேண்டுதல்களுக்குக் கடவுள் செவி சாய்க்கத் தொடங்கி விட்டார் என்றார் அவர்.

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்துக்குப் பின் வீட்டுக்குள் தூங்க பயப்படும் மக்கள் வெளியேயே தூங்குகிறார்கள். ஜெயின் மற்றும் இந்துகோவில்களில் தொடர்ந்து சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்த வண்ணம் உள்ளன. மசூதிகளிலும், தேவாலயங்களிலும் தினமும் சிறப்புத் தொழுகைகளும், சிறப்புவழிபாடுகளும் நடந்து வருகின்றன. கோவில் மற்றும் மசூதிகளுக்கு வரும் மக்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் பிரசாதங்களவழங்கப்படுகின்றன.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X