தி.மு.க.வில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம்
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் திருமாவளவன் தி.மு.க. அணியில் இணைந்தார்.
அ.தி.மு.க. அணியில் இதுவரை திருமாவளவன் இருந்தார். ஆனால் பா.ம.க. தலைவர் ராமதாஸ் அ.தி.மு.க.அணியில் சேர்ந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தார். அணியிலிருந்து விலகுவது என முடிவு செய்தார்.
ஆனால் த.மா.கா. தலைவர் மூப்பனாரின் முடிவுக்காக காத்திருந்தார். மூப்பனார் எந்த முடிவும் எடுக்காமல் காலம்தாழ்த்தியதால் தான் மட்டும் வேறு அணியில் சேர முடிவெடுத்தார்.
திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு தி.மு.க.தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு ஆதரவாளர்கள் புடைசூழசென்று, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.க. அணியில் இணைந்தார்.
பின்னர் கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில், திருமாவளவன் எங்களுடன் இணைந்துள்ளார். மூப்பனாரையும்தி.மு.க. அணிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியே. கூட்டணிக்கான கதவுஅடைக்கப்பட்டதாக நாங்கள் கூறவில்லை. அவர்கள்தான் கதவை அடைத்து இருப்பதாக கூறினோம்.
புதுவையில் ஆட்சியை பங்கிட அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் உடன்பாடு செய்து உள்ளனர். இது என்ன பட்டி,விக்கிரமாதித்தன் கதையா, நீ 6 மாதம், நான் 6 மாதம் என்று கூற.
ம.தி.மு.க., பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி குறித்து இரண்டொரு நாளில் பேச்சுவார்த்தை துவங்குவோம். எங்கள்அணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. 3-வது அணி அமைத்தால் கூட நாங்களே வெற்றி பெறுவோம் என்றார்.
திருமாவளவன் கூறுகையில், மரியாதை கொடுக்கும் அணியில் இணைந்துள்ளோம. எங்கள் முக்கிய எதிரியேபா.ம.க.தான். அந்த கட்சியுள்ள அணியை தோற்கடிப்பதே எங்களது லட்சியம்.
மூப்பனாரும் இந்த அணிக்கு வர வேண்டும். அது நடப்பதுதான் ஜனநாயகத்துக்கும் நல்லது. நாங்கள் மூன்றாவதுஅணியில் சேர மாட்டோம். அந்த அணி அமைவதற்கும் வாய்ப்பில்லை என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications