For Daily Alerts
சைக்கிள், லாரி மோதலில் 3 பேர் பலி
சென்னை:
சென்னை அருகே ராமநாதபுரம் டவுன் பகுதியில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த மூன்று ஜவுளி தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் அவர்கள் மூன்றுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்து ராமநாத புரம் டவுன் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு நடந்தது.
விபத்து குறித்து போலீசார் கூறுகையில், ஜவுளித் தொழிற்சாலையில் வேலை முடிந்த பிறகு அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நடந்ததாகத் தெரிவித்தனர்.
விபத்தில் இறந்த மூன்று பேரின் பெயர், இதர விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!