மூப்பனார் - இளங்கோவன் ஆலோசனை
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை அவரது இல்லத்தில்சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு மொத்தமாக 47தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் எவை என்பது குறித்து திங்கள்கிழமை கட்சித் தலைவர்இளங்கோவன், தங்களுக்குத் தொகுதிகளைத் தரப் போகும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை சந்தித்துவிவாதித்தார்.
15 தொகுதிகள் எது, அதில் வெற்றி வாய்ப்பு என்ன, தேர்தல் பிரசாரம் குறித்த உத்திகள் ஆகியவை குறித்துஅப்போது இருவரும் ஆலோசித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில், மூப்பனாருடன் 15 தொகுதிகள் குறித்து விவாதித்தேன்.எங்களிடம் 234 தொகுதிகள் குறித்த விவரம் உள்ளது. எனவே எந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பது குறித்து விவாதித்தோம்.
தேர்வு செய்த தொகுதிகளின் அடிப்படையில் மீண்டும் மூப்பனாருடன் பேசி என்ன தொகுதிகள் தேவை என்றுகோரிக்கை வைப்போம் என்றார் இளங்கோவன்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!