மயிலாப்பூரில் போட்டியிடுவாரா லட்சுமணன்?
சென்னை:
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவரை வேட்பாளராக அறிவிக்குமாறுபரிந்துரை செய்யப்பட்டுள்ளது
சென்னை, மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க.வின் மாநில துணை முன்னாள் தலைவராக இருந்வர் டாக்டர்மைத்ரேயன். அவர் பா.ஜ.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அவர் மயிலாப்பூரில் அ.தி.மு.க.சார்பில்போட்டியிடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
புதன்கிழமை காலை பா.ஜ.க.வின் தேர்தல் பணிக்குழு கூடியது. வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில்போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை செவ்வாய்க்கிழமை பா.ஜ.க.வெளியிட்டது. இதில் மயிலாப்பூரில்போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.
தற்போது டாக்டர் மைத்ரேயன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதாக எதிர்பார்க்கப்படுவதால் அவரை எதிர்த்துபோட்டியிட பா.ஜ.க.சார்பில் பா.ஜ.க.வின் மாநில முன்னாள் தலைவர் கே.ஏ.லட்சுமணனை வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என தமிழக பா.ஜ.க. தேர்தல் பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க.சார்பில் போட்டியிடுவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேரின் பெயர்களை பா.ஜ.கவின்தமிழக தேர்தல் பணிக்குழு பரிந்துரை செய்திருந்தது. அவர்களிலிருந்து ஒருவரை மத்திய பா.ஜ.க. தலைமைதேர்ந்தெடுத்து வேட்பாளராக அறிவித்தது.
மயிலாப்பூர் தொகுதிக்கு தமிழக பா.ஜ.க.வின் இளைஞரணி தலைவர் குமாரவேலுவின் பெயரும், மகளிர்அணித்தலைவர் லலிதா சுபாஷின் பெயரும் முதலில் பரிந்துரை செய்யப்பட்ட பட்டியிலில் இடம் பெற்றிருந்தது.தற்போது லட்சுமணன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் இல. கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மயிலாப்பூர்தொகுதிக்கான வேட்பாளர் பா.ஜ.க.வின் தலைவரால் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications