ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடலாமா? உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்கும்
சென்னை:
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடலாமா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றமும், தேர்தல் கமிஷனும் தான் முடிவு செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்பிரமணியம் கூறுகையில், அவர் தேர்தலில் போட்டியிடஅனுமதிப்படலாம், அல்லது போட்டியிடக் கூடாது எனவும் ஆணையிடப்படலாம். தேர்தல் கமிஷனும், உச்சநீதிமன்றமும் தான் இதில் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். இதில் நான் எந்தத் தீர்ப்பும் அளிக்க முடியாதுஎன்றார்.
உச்ச நீதிமன்றத்தில் ஜெ. மனு:
இதையடுத்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் டெல்லி விரைந்தனர். ஜெயலலிதா குற்றவாளி இல்லை எனஅறிவிக்கக் கோரியும், தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல்செய்ய உள்ளனர்.
ஆனால், இதை ஜெயலலிதா தரப்பில் மிக ரகசியமாக வைத்துள்ளனர். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதிடெல்லி விரைந்துவிட்டது உறுதியாகியுள்ளது.
தமிழக அரசும் மனு:
இதையடுத்து தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதாதரப்பில் ஏதாவது மனு தாக்கல் செய்யப்பட்டால் தங்களுக்கு அது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றும்ஜெயலலிதா மனு மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கவேண்டும் எனவும் தமிழக அரசு அந்த மனுவில் கோர உள்ளது.
முன்னதாக வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மலை சுப்பிரமணியத்தின் நீதிமன்றத்தில்கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிமுகவினர், திமுகவினர், பத்திரிக்கையாளர்கள் என பெரும் அளவில் கூட்டம் அங்குகூடியிருந்தது.
புதன்கிழமை நீதிபதி வழங்கிய தீர்ப்பில் விளக்கம் கேட்டு ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் விளக்கம்கேட்டிருந்ததையடுத்து இது குறித்து வியாழக்கிழமை விளக்கம் அளிப்பதாக நீதிபதி மலை சுப்பிரமணியம்கூறியிருந்தார்.
இதனால் அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், இதில் தங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. நீதிபதியிடம்இருந்து எங்களுக்கு எந்த விளக்கமும் வேண்டாம் என ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் பல்டி அடித்தனர்.
இதனால், எரிச்சலடைந்த நீதிபதி, நீங்கள் தான் விளக்கம் கேட்டீர்கள். அதனால் தான் இவ்வளவு கூட்டம் இங்குகூடியுள்ளது. இப்போது விளக்கம் வேண்டாம் என்கிறீர்கள். தீர்ப்பு விவரம் தயாராக உள்ளது. வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களை நோக்கி.
அரசு வழக்கறிஞரான வெங்கடசுப்பிரமணியம் நீதிமன்றத்தின் வெளியே கூறுகையில், ஜெயலலிதாவின்கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார். உச்ச நீதிமன்றம் தான் ஜெயலலிதா போட்டியிட முடியுமா இல்லையாஎன முடிவெடுக்க வேண்டும் என்றார்.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களில் ஒருவரான சஞ்சய் ராமசாமி கூறுகையில், நீதிபதியின் தீர்ப்பில் நாங்கள்விளக்கம் கேட்கவில்லை. ஜெயலலிதா போட்டியிடலாம் என தெளிவாகக் தீர்ப்பில் மிகத்தெளிவாகக்கூறப்பட்டிருக்கிறது என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!