கைவினைஞர்கள் சங்கத்துக்கு மூப்பனார் அல்வா

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு கைவினைஞர் சங்கம் கூட்டணியிலிருந்து விலகி 30 இடங்களில் போட்டியிடுகிறது.

தமிழ் மாநில காங்கிரசில் ஒரு இடம் கூட கிடைக்காததால் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அந்த இயக்கத்தின் தலைவர் கே.பி சுப்பையன்தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரசில் தமிழக கைவினைஞர்கள் சங்க முன்னேற்றக் கழகம் தேர்தல் உடன்பாடு செய்து கொணடிருந்தது. இந்த கழகம், தமாகாவில் இணைந்துபோட்டியிட 5 இடங்களைக் கேட்டிருந்தது. ஆனால், இறுதியில் இரண்டு இடங்கள் தருவதாக மூப்பனார் கூறியிருந்ததாகத் தெரிகிறது.

ஆனால், இந்த அமைப்பிற்கு எந்த ஒரு இடத்தையும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒதுக்காததால் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக தமிழ்நாடுகைவினைஞர்கள் சங்கம் முடிவு செய்தது.

தற்போது இந்த இயக்கம் தனித்து தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் 30 இடங்களில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடுகைவினைஞர்கள் சங்கத் தலைவர் கே.பி சுப்பையன் கூறுகையில்,

தமிழகம் முழுவதும் கைவினைஞர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 50 லட்சம் பேர் உள்ளனர். சட்டசபையில் எங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்என்பதற்காக தமிழ் மாநில காங்கிரசில் இடம் கேட்டோம். 5 இடங்கள் கேட்டதில், 2 இடங்கள் தர ஒப்புக் கொண்டனர்.

ஆனால் இறுதியில் ஒரு இடம் கூட தரவில்லை. எனவே நாங்கள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+