For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவரின் வேட்புமனு ஏற்பு

By Staff
Google Oneindia Tamil News

கொல்லம்:

ஊழல் வழக்கில் 5 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து தீரப்பு வழங்கப்பட்ட கேரளமாநில எம்.எல்.ஏயின் வேட்பு மனு ஏற்கப்பட்டு அவர் வரவிருக்கும் கேரளசட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் கமிஷனின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி கிரிமினல் வழக்கிலோஅல்லது ஊழல் வழக்கிலோ 2 ஆண்டுக்கு மேல் நீதிமன்றத்தால் சிறை தண்டனைவழங்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதனடிப்படையில்தான் தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின்வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்தது.

கேரள மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன்பிள்ளை தற்போது கேரளகாங்கிரஸ் (பி) கட்டியின் தலைவராக இருக்கிறார். கேரளாவில் காங்கிரஸ் கட்சியின்தலைமையிலான கூட்டணியில் இவர் கட்சியும் அங்கம் வகிக்கிறது.

இவர் அமைச்சர் பொறுப்பு வகித்து வந்த போது எடமலையார் லஞ்ச ஊழல் வழக்கில்இவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

1980களில் மின்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த போது தனியார் நிறுவனத்திற்குசட்ட விரோதமாக செயல்பட்டதாக கிராஃபைட் ஊழல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இவருக்கு 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தசிறைதண்டனை கேரள உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

சென்றமாதம் பாலகிருஷ்ணபிள்ளை 1 வாரம் சிறையிலிருந்தார், உச்ச நீதிமன்றத்தில்செய்துள்ள மேல் முறையீடை காரணம் காட்டி ஜாமீனில் வெளிவந்தார்,

இவர் தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார் அடுத்த மாதம் 10ம் தேதி நடக்கவிருக்கும்கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் கொல்லத்தில் உள்ளகொட்டாரக்கரா தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இவர் வேட்புமனு ஏற்கப்படக்கூடாது என கேரள ஆளும்கட்சியினர்கூறிவந்ததனர் வேட்புமனு பரிசீலனை நாளான செவ்வாய்க்கிழமைபாலகிருஷ்ணபிள்ளையின் வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணபிள்ளை தேர்தலில்போட்டியிடலாம் என்பது குறித்து வலியுறுத்தும் தங்கள் தரப்பு வாதங்களைஎடுத்துரைக்க 1 நாள் அவகாசம் கேட்டனர்.

அதனடிப்படையில் பாலகிருஷ்ணபிள்ளையின் வேட்புமனு புதன்கிழமைபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பாலகிருஷ்ணபிள்ளையின் வக்கில்களின்வாதங்களை ஏற்று பாலகிருஷ்ணபிள்ளையின் மனுவை ஏற்றுக்கொள்வதாக தேர்தல்அதிகாரி சுகந்தன் அறிவித்தார்.

இது பற்றி தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

மக்கள்பிரதிநிதித்துவ சட்டம் 8 (4)ன் படி எம்.எல்.ஏ. அல்லது எம்.பியாகஇருப்பவர்கள், வழக்கில் 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்று மேல் முறையீடுசெய்திருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.

வேட்புமனு பரிசீலனை தினத்தின்போது பாலகிருஷ்ணபிள்ளை எம்.எல்..ஏவாகஇருந்ததால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது.

பாலகிருஷ்ணபிள்ளை தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடுசெய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுமையில் உள்ளது.

மணிசந்திர மண்டல், தேவரஞ்சன் மகாபோதயா ஆகியோருக்கு இடையேயானவழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டுபாலகிருஷ்ண பிள்ளையின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X