For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவை முதல்வராக ஆளுநர் அனுமதிப்பாரா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில்போட்டியிட முடியாது என்பது தெளிவாகிவிட்டதால், அ.தி.மு.க வெற்றி பெற்றால்ஜெயலலிதா முதல்வராக வரமுடியுமா என்பது குறித்து பல விதமான கருத்துக்கள்கூறப்பட்டு வருகின்றன.

வேட்புமனு பரிசீலனையில் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றதால்ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் 4 தொகுதிகளிலும் நிராகரிக்கப்பட்டன.

ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கபட்டதில் எந்த விதமான தவறும் இல்லை எனதே.ஜ.கூட்டணி கட்சிகள் கூறுகின்றன. ஆனால் அ.தி.மு.க.கூட்டணி கட்சிகள்ஜெயலலிதாவை தேர்தலில் போட்டியிடவிடாமல் தி.மு.க. சதி செய்ததாக குற்றம்சாட்டுகின்றன.

ஆளுநர் என்ன செய்வார்?

இப்போது ஒருவேளை அ.தி.மு.க. வெற்றி பெற்றால். ஜெயலலிதாத முதல்வராகதேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தேர்தலில் போட்டியிடஅனுமதி மறுக்கப்பட்டவருக்கு ஆளுனர் பதவி பிரமாணம் செய்து வைப்பாரா என்றகேள்வி புதிதாக முளைத்துள்ளது.

அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருக்கும் கூட்டணி கட்சிகள் ஜெயலலிதாமுதல்வராவதை யாரும் தடுக்க முடியாது என கூறி ஜெயலலிதாவுக்கு தொடர்ந்துஆதரவளித்து வருகின்றன.

ஆனால் தமிழகத்தில் தி.மு.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதலைவர்கள், அ.தி.மு.க. வென்று ஜெயலலிதா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால்அவருக்கு ஆளுனர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கமாட்டார் என கூறிவருகின்றனர்.

இந்த விஷயத்தில் சட்ட நிபுணர்களும் இரு வேறுபட்ட கருத்துக்களை கூறிவருகின்றனர்.

ஒரு பிரிவு வழக்கறிஞர்ள், சட்டசபை உறுப்பினர்களால் ஒருவர் முதல்வராகதேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு ஆளுனர் கட்டாயம் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்கின்றனர்.

ஆனால் மற்றொரு பிரிவினரோ தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டவருக்குஆளுனர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மாட்டார் என்கின்றனர்.

ஜெயலலிதாவோ அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நான்தான் முதல்வர் எனஅறிவித்துவிட்டார்.

முன்னாள் மத்திய நிதயமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவைதலைவருமான சிதமரம் கூறுகையில், தமிழக ஆளுனர் பாத்திமா பீவி சட்டநுணுக்கங்களை நன்கு அறிந்தவர்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். இவர் நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு பதவிபிரமாணம் செய்து வைக்க மாட்டார். தேர்தலில் போட்டியிட அனுமதிமறுக்கப்பட்டவருக்கு எப்படி ஆளுனர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். இதுதமிழகம். பீகார் அல்ல என்றார்.

பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் இல. கணேசனும் இதே கருத்தையேதெரிவித்திருக்கிறார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணயிம் சுவாமி கூறுகையில், ஜெயலலிதாவின்வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது 1992ம் ஆண்டு என்னால் ஆரம்பிக்கபட்டநல்லாட்சி இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி. ஊழல் வழக்கில் தேர்தலில் போட்டியிடஅனுமதி மறுக்கப்பட்டவருக்கு ஆளுனர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கமாட்டார்என்றார்.

சுவாமிதான் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடரஅப்போதைய தமிழக ஆ ளுனர் சென்னா ரெட்டியிடமிருந்து அனுமதி பெற்று வழக்குதொடர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்மூப்பானார் கூறுகையில், ஜெயலலிதாவினவேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. தேர்தல் அதிகாரிகள்வேட்புமனுவை நிராகரித்தது இறுதி முடிவல்ல. மக்கள் தீர்ப்புதான் முக்கியம் என்றார்.

ஆனாலும் அ.தி.மு.க, வெற்றி பெற்றால் யார் முதல்வராக வருவார் என்பது பற்றி அவர்எதுவும் கூறவில்லை,.

மூப்பனார் தற்போது இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சையில்ஈடுபட்டு வருகிறார். இவர் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தில்ஈடுபடுகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போதுதான் இவர் ஜெயலலிதா முதல்வராவதை ஆதரிப்பாராஇல்லையா என்பது தெரியவரும்.

முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறுகையில், ஜெயலலிதாமுதல்வராவதை யாரும் தடுக்க முடியாது. அவர்தான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார்என்றார்.

இது நாள்வரை ஜெயலலிதாவின் வேட்புமனு ஏற்கப்படுமா? மறுக்கப்படுமா? என்றகேள்வி நிலவி வந்தது. பல தலைவர்களும் பல கருத்துக்களை கூறி வந்தனர். அதற்குமுடிவு தெரிந்துவிட்டது.

இப்போது அ.தி.மு.க வெற்றி பெற்றால் ஜெயலலிதா முதல்வராகதேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு ஆளுனர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா?மாட்டாரா? என்ற புது கேள்வி முளைத்துள்ளது.

இனி வரும் நாட்களில் அரசியில் கட்சிகளின் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது முக்கியமான இடம் பெறும்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X