படகு மீது மோதிய கப்பல் .. மீனவர் சாவு
சென்னை:
சென்னை அருகே நடுக்கடலில் கப்பல் மோதியதில், படகில் வந்த மீனவர் பலியானார்.
காசிமேடு அருகே கடலில் இந்த சம்பவம் நடந்தது. விபத்தில் இறந்த மீனவர் பெயர் ஊமையன் (30). இவர் ராயபுரம், சிங்காரவேலர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர். ஊமையனும், சின்னத்துரை (42), தேசப்பன் (40), கதிர்வேலு (28) ஆகியோர்சனிக்கிழமை இரவு காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து படகில் மீன் பிடிக்கச் சென்றனர்.
மீன் பிடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், சென்னை துறைமுகத்தில் சரக்குகளை இறக்கி விட்டு ஒரு சரக்குக் கப்பல்திரும்பிக் கொண்டிருந்தது. நடுக்கடலில் கப்பல் வந்தபோது, எதிரே வந்த படகில் மோதியது. இதில் படகு உடைந்து கடலில்மூழ்கியது.
4 மீனவர்களும் கடலில் மூழ்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த எண்ணூ<ர் பகுதியிலுள்ள மீனவர்கள் இவர்களைக் காப்பாற்றமுயன்றனர். இதில் ஊமையனைத் தவிர மற்றவர்கள் மீட்கப்பட்டனர். ஊமையன் கடலில் மூழ்கி இறந்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!