மருமகனுடன் மாமாவின் தேர்தல் பிரசாரம்
சென்னை:
எனது பணி தொடர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று சென்னைசேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
கருணாநிதி 2-வது கட்டமாக தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.மாலையில், அவர் சென்னைப் பல்கலைக்கழகம் அருகே வேனில் இருந்தபடி வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின்போது கருணாநிதி பேசியதாவது:
கடந்த பத்து நாட்களாக தமிழகம் முழுவதிலும் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, எங்கு பார்த்தாலும் திமுக அலைவீசுவதை புரிந்து கொண்டேன். அந்த சந்தோஷமான செய்தியை உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன்.
மே 10-ம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் எனக்கும், திமுக வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்திலும்,கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அவர்களது சின்னத்திலும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் ஆணைய விதிப்படிதான் ஜெயலலிதாவின் மனு தள்ளுபடியானது. ஆனால் என் மீதும், ஸ்டாலின் மீதும்பழி போடுகிறார்கள். ஆற்காடு வீராசாமிதான் காரணம், ஆலடி அருணாதான் காரணம் என்று புலம்புகிறார்கள்.
நானா அவர்களிடம் சொன்னேன் தேர்தலில் நிற்க முடியாது என்று. 3 ஆண்டு தண்டனை பெற்றதால், அவரதுவேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. அரசுச் சொத்தான டான்சி நிலத்தை வாங்கியது தப்பு. தப்பு என்று தெரிந்தும்ஏன் வாங்கினீர்கள். முன்னாள் முதல்வரான என்னிடம் வாங்குவதற்கு முன் ஆலோசனை கேட்டிருக்கலாமே?.
அரசு நிலத்தை வாங்குவது சட்டப்படி தப்பும்மா என்று நான் ஆலோசனை கூறியிருப்பேனே? எதிரியாகவேஇருந்தாலும் யோசனை கேட்டால் சொல்ல வேண்டும் அல்லவா?.
காமராஜர் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின் தேர்தலில் நின்று ஜெயித்தார் என்று மூப்பனார் சொல்கிறார்.காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று கூறிய மூப்பனார், காமராஜர் படமே இல்லாமல் தேர்தல்அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த மூப்பனார், ஏதோ பேச வேண்டும் என்பதற்காக காமராஜரைஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசி அவரை அவமானப்படுத்த வேண்டாம்.
அதேபோல, அண்ணாவுடன் ஜெயலலிதாவை ஒப்பிட்டுப் பேசியுள்ளார் சங்கரய்யா. அண்ணாவையும்,காமராஜரையும் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அதை பொறுத்துக் கொள்ள முடியாது.
சேப்பாக்கம் தொகுதிக்காக நான் பல நல்ல பணிகளைச் செய்துள்ளேன். அந்தப் பணி தொடர உதயசூரியன்சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் கருணாநிதி.
கருணாநிதியின் பிரசாரத்தின்போது, அவரது மருமகனும், மத்திய அமைச்சருமான முரசொலி மாறன், எழும்பூர்வேட்பாளர் பரிதி இளம்வழுதி மற்றும் மாவட்ட திமுக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்த முரசொலி மாறன், திடீரென எழும்பூரில் நடந்த தேர்தல்பிரசாரத்தில் கலந்து கொண்டார். கோழைகள் ஒதுங்கியிருக்க மாட்டார்கள் என்றார். இப்போது கருணாநிதியுடன்அவர் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications