For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலறும் அரசியல்வாதிகள்... ஆழ்ந்த அமைதியில் மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில், தமிழக தலைவர்களுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டாலும்,தமிழக மக்களிடையே எந்த விதமான பரபரப்பும் காணப்படவில்லை.

தமிழக தேர்தலின் சிறப்பம்சமே வித விதமான போஸ்களில் அரசியல் தலைவர்களின் கட்அவுட்கள் விண்ணைமுட்டும் அளவுவைக்கப்பட்டிருப்பதும், மூலைக்கு மூலை அரசியல் கட்சிகளின் பிரசார ஒலி காதை செவிடாக்கும் வண்ணம் அலறுவதும்தான்

ஆனால் தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக இவையெல்லாம் இந்த முறை மிஸ்ஸிங். இதனால் அரசியல்வாதிகளைபிடித்து ஆட்டும் ஜுரம் தமிழக மக்களிடம் எந்த விதமான பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை.

இறுதியாக தாங்கள் இதுவரை மறந்திருந்த பல பகுதிகளுக்கும் அரசியல்வாதிகள் கூப்பிய கைகளுடன் வரத் தொடங்கிய பின்பே, அடஇவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என மக்கள் தேர்தல் வருவதை உணரத் தொடங்கியுள்ளனர்.

அரசியல் தலைவர்களின் கூட்டங்களுக்கு செல்லும் மக்கள் கூட்டமும் குறைந்து விட்டது. தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமானகருணாநிதியின் மகனும், சென்னை நகர மேயருமான மு.க. ஸ்டாலின் மதுரையில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்திருந்தமக்களின் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

தி.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தமிழ்குடிமகன் திங்கள்கிழமை திருச்சியில் நடத்திய தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அவர் பேச்சைக் கேட்க வெறும் 8 பேர் மட்டுமே வந்திருந்தனர். இதில் மைக் செட்காரரும் அடக்கம்!

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று.மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தேர்தல் பிரசாரங்களில் அதிக அக்கறை காட்டக் கூடியவருமான ஹர்கிஷன் சுர்ஜித் கூடதனது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் தாமதமாகவே துவங்கியுள்ளார்.

அதே போல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வாவும் பிரசாரத்தை தாமதமாகவேதுவக்கியுள்ளார்.

தி.மு.கவின் பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக வருவது முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் பங்கேற்கும்பிரச்சாரக் கூட்டங்களுக்குத் தான்.

பிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோரும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம்செய்யவுள்ளனர் என தி.மு.க. மக்களுக்கு உறுதியளித்துள்ளது. அவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு அதிக அளவில் மக்கள் கூட்டம்வரக்கூடும்.

இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம், குறிப்பிடத்தக்க எந்த பிரச்சனையையும் அரசியல் கட்சிகள் கையில் எடுத்துபிரசாரம் செய்ய முடியவில்லை.

ஒருவர் மேல் ஒருவர் கூறும் ஊழல் குற்றச்சாட்டு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தும் என தோன்றவில்லை, அதே போல்ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதும் எதிர்பார்த்தது போல் எந்த விதமான அனுதாப அலையையும்எற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து வாக்காளர் ஒருவர் கூறுகையில், நகர் புறங்களில் ஜெயலலிதாவுக்குஆதரவு அதிகமாக காணப்படவில்லை. இதை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது.

ஏனென்றால் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி விலையின் உயர்வு போன்றவற்றால்தி.மு.க.அரசின் மேல் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்களின் கோபம் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும்.

பெட்ரோல் விலை உயர்வும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களிலும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இந்தவிஷயங்களில் மக்கள் கொண்டுள்ள அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ப்பும் உள்ளது என்றார்.

இந்த தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினர் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதும் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விஷயம்.

இந்து ஆதரவு கட்சியாகவும், மதவாதக் கட்சியாகவும் எண்ணப்படும் பா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி வைத்திருப்பதால் முஸ்லீம்சமூகத்தினர் தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களிப்பது சந்தேகம் என கூறப்படுகிறது.

ஆனாலும் அவர்கள் அனைவரும் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என உறுதியாக கூற முடியாது.

அ.தி.மு.கவுக்கு ஆதரவளிப்பவர்கள் எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை, அதே போல் கம்யூனிஸ்ட் கட்சிக்கான ஆதரவிலும்எந்த விதமான மாற்றமும் இல்லை.

அ.தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பவர்களிடையேயும் எந்த விதமான மாற்றமும்காணப்டவில்லை.

தி.மு.கவுக்கும் காணப்படும் ஆதரவில் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு, அவர்களுக்கான ஆதரவில் ஏற்றத்தாழ்வுஏற்படலாம் என கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும். எந்த கட்சி வெற்றி பெற்றாலும் மிகப் பெரும் அளவில் பெரும்பான்மை பெற்று பெற முடியாதுஎன்ற நிலைதான் தற்போது நிலவுகிறது.

மக்களுடைய மன நிலையை புரிந்து கொள்ள முடியாமல் கட்சிகள் தட்டுத்தடுமாறி வருகின்றன. மண்டையைப் பிளக்கும் வெயிலில்தலைவர்கள் மக்களைப் பார்த்து கும்பிடுகின்றனர். மக்கள் மர்மப் புன்னகை வீசுகின்றனர். இந்த மர்மத்துக்கு அர்த்தம் புரியாமல்அரசியல்வாதிகள் பெரும் பாடுபட்டு வருகின்றனர்.

அதே போல முன்பு மாதிரி விடிய விடிய காத்திருந்து அடுக்கு மொழியில் தலைவர்கள் வசனம் பேச அதைக் கேட்டு கைதட்டும்வழக்கம் எல்லாம் ஒழிந்து வருகிறது. வீர வசனம் பேசுபவர்கள், நீட்டி முழக்கி பிரசாரம் என்ற பெயரில் பிளேடுபோடுபவர்களை மக்கள் கண்டு கொள்வதும் குறைந்து வருகிறது.

இது தமிழகத்துக்கு நல்ல அறிகுறி தான்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X