• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாருக்கு ஓட்டுப் போடலாம்?

By Staff
|

இளங்கோவன் போன்ற அரசியல் நாகரீகம் நிறைந்தவர்கள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களாகவர வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்களிடையே நிறையவே உள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி என்ற அளவில் செயல்பாடுகள்மிகவும் குறைவாகவே இருந்தன.

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

பாரதீய ஜனதாக் கட்சி

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ள ஒரே கட்சி பாரதீயஜனதாக் கட்சிதான். திட்டமிட்ட செயல்பாடுகள், கட்சியின் பொதுச் செயலாளர் இல. கணேசனின்அணுகுமுறை ஆகியவற்றால் இன்று தமிழகத்தின் முக்கிய கட்சியாக மாறியுள்ளது பா.ஜ.க.

தமிழகத்தைச் சேர்ந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தி அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் பதவியில் இருப்பதும்பாரதீய ஜனதாவுக்கு பெரும் பலத்தைக் கொடுத்துள்ளது. மக்கள் பிரச்சினையில் ஆர்வம் காட்டிஇவர்கள் செயல்பட்டது, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தாலும் கூட அவ்வப்போது அவர்களது குறைகளை நாசூக்காகசுட்டிக் காட்டியது பா.ஜ.க.வுக்கு நல்ல பெயரைத் தேடித் தந்துள்ளது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சி என்ற ஹோதாவில் இருந்தாலும் கூட, அதை வைத்துக்கொண்டு ஆடாமல் இருந்ததும் இக்கட்சிக்குப் பெயர் தேடித் தந்துள்ளது.

இக்கட்சியின் ரங்கராஜன் குமாரமங்கலம் திருச்சி தொகுதிக்கு பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.அவரது அகால மரணம் கட்சியை விட திருச்சி தொகுதிக்குத்தான் பெரும் இழப்பு என்ற பேச்சு திருச்சிமக்களிடையே நிரம்பவே உள்ளது.

இவர்களது ஒரே எம்.எல்.ஏவான பத்மநாபபுரம் வேலாயுதன், மிகவும் துடிப்புடன் செயல்பட்டு நல்லபெயரைச் சம்பாதித்துள்ளார். தொகுதிக்கு நிறைய செய்துள்ளதாக பேச்சு உள்ளது. சட்டசபையிலும்தொகுதிப் பிரச்சினைகளை வைத்துப் பேசியுள்ளார்.

டெஹல்கா.காம் மட்டுமே இவர்களுக்கு எதிராக உள்ள ஒரே பெரிய குற்றச்சாட்டு. மற்றபடிபா.ஜ.க.வுக்கு எதிரான எந்த அம்சமும் இந்தத் தேர்தலில் இல்லை.

ம.தி.மு.க

தமிழக மக்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தையும் பெற்ற ஒரே கட்சி ம.தி.முகதான். தி.மு.ககூட்டணியில் வலுவான ஒரு கட்சியாக இருந்து வந்த இவர்கள் திடீரென வெளியேற்றப்பட்டார்கள்.காரணம் என்னவோ சின்னதுதான்.

தொகுதிப் பங்கீட்டில், ஒரு தொகுதியால் வந்த குழப்பத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிடிவாதப்போக்கு காரணமாக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டது ம.தி.மு.க.

2 மத்திய அமைச்சர்கள், நான்கு எம்.பிக்களைக் கொண்ட ம.தி.முகவுக்கு இதுவரை சட்டசபையில்எம்.எல்.ஏக்கள் இல்லை. இம்முறை நிறைய எம்.எல்.ஏக்களைப் பெற்று விடலாம் என்றஆசையில் இருந்த வைகோவுக்கு ஏமாற்றம் தரும் வகையில் நடந்து கொண்டு விட்டது தி.மு.க.

பெரிய அளவில் கெட்ட பெயர் சம்பாதித்து வைக்கவில்லை வைகோ. உதவி கேட்டவர்களுக்கு ஓடிவந்து செய்யும் பண்பாளர், கடும் உழைப்பாளர், உதவி மனப்பான்மை அதிகம் உள்ளவர், நேர்மையாகநடப்பவர் என்ற பெயரைப் பெற்றவர்.

ஒரு நல்ல அரசியல் கட்சிக்குரிய அத்தனை விஷயங்களும் ம.தி.முகவுக்கு இருந்தும் அது இன்னும்சட்டசபையில் கணக்கைத் துவக்காதது நல்ல அரசியல்வாதிகளுக்கு வருத்தத்தையே கொடுத்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X